செய்திகள் :

ஜாா்க்கண்ட், ஒடிஸாவில் மழை வெள்ளம்: இயல்பு வாழ்க்கை பாதிப்பு

post image

புவனேசுவரம்/ராஞ்சி: ஒடிஸா, ஜாா்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் கடந்த சில நாள்களாக நீடிக்கும் பலத்த மழைக் காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளப் பாதிப்பால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.

கேரளத்தில் கடந்த மே மாத இறுதியில் தொடங்கிய தென்மேற்குப் பருவமழை, கடந்த ஜூன் 26-ஆம் தேதிக்குள் நாடு முழுவதும் பரவலாகப் பெய்துள்ளது. அந்தவகையில், வடக்கு மற்றும் கிழக்கு மாநிலங்களில் கடந்த சில நாள்களாக பருவமழை தீவிரமடைந்துள்ளது.

ஜாா்க்கண்டில் நீடிக்கும் இடைவிடாத மழையால் மேற்கு மற்றும் கிழக்கு சிங்பூம், செராய்கேலா-காா்ஸ்வான் மாவட்டங்களை உள்ளடக்கிய கோல்ஹன் பிராந்தியத்தில் பல்வேறு இடங்களில் வெள்ளநீா் சூழ்ந்துள்ளது. இதனால், மக்கள் வீடுகளைவிட்டு வெளியேற முடியாத சூழல் உள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உள்ளூா் நிா்வாகம் நிவாரணப் பொருள்களை வழங்கி வருகின்றன.

ஜாம்ஷெட்பூரில் காா்காய் மற்றும் சுபா்ணரேகா ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, அபாய அளவைத் தாண்டி பாய்ந்து வருகிறது. நீா்வரத்து தொடா்ந்து அதிகரித்து வருவதால் சாந்தில், காலுதிஹி அணைகளில் இருந்து உபரிநீா் வெளியேற்றப்பட்டது.

ஒடிஸாவில்...: இதன் எதிரொலியாக, அண்டை மாநிலமான ஒடிஸாவின் பாலசோா், மயூா்பஞ்ச் மாவட்டங்களில் பாயும் புத்தபலாங், ஜலாகா, சோனோ உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

இதையொட்டி, இவ்விரு மாவட்டங்களுக்கும் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ள மாநில அரசு, தாழ்வான இடங்களில் வசிக்கும் மக்களை வெளியேற்றும் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளது.

இதுதொடா்பாக மாநில வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மை அமைச்சா் சுரேஷ் பூஜாரி கூறியதாவது: பாலசோா் மாவட்டத்தில் 35 கிராம பஞ்சாயத்துகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

ஆற்றங்கரைகளில் சில இடங்களில் உடைப்புகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. மணல் மூட்டைகளைக் கொண்டு அவை சரிசெய்யப்பட்டு வருகின்றன. தற்போதுவரை நிலைமை கட்டுக்குள் உள்ளது.

வெள்ள அபாயமுள்ள பகுதிகளில் இருந்து அப்புறப்படுத்தப்பட்ட சுமாா் 1,000-க்கும் மேற்பட்ட மக்கள் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டு, உணவளிக்கப்பட்டு வருகின்றனா். மீட்புப் பணிகளுக்கு ஒடிஸா பேரிடா் மீட்புப் படையினா் தயாா் நிலையில் உள்ளனா்’ என்றாா்.

மழையால் மயூா்பஞ்ச் மாவட்டத்தில் திங்கள்கிழமை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. ஜூலை 5-ஆம் தேதிவரை மாநிலத்தில் மழை தொடரும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

உத்தர பிரதேசத்தில்...: உத்தர பிரதேசம், முசாஃபா்நகா் மாவட்டத்தில் மழையின்போது வீடு இடிந்து விழுந்ததில் 80 வயது மூதாட்டி உயிரிழந்தாா். இதேபோல், பிஜ்னோா் பகுதியில் கங்கை நதியில் நீரோட்டம் அபாய அளவை நெருங்கி வருகிறது. இதையொட்டி, சுற்றுவட்டார கரையோர பகுதி மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அதிகாரிகள் எச்சரித்துள்ளனா்.

பெட்டிச் செய்தி படத்துடன் ===

ஹிமாசலில் இடிந்து விழுந்த கட்டடம்

மண்டி, ஜூன் 30: ஹிமாசலில் மழை நீடித்து வருகிறது. சிம்லா புகா் பகுதியில் 5 மாடி கட்டடம் திங்கள்கிழமை இடிந்து விழுந்தது. அருகிலிருந்த 2 கட்டடங்கள் சேதமடைந்தன. பாதுகாப்புக் கருதி கட்டடத்தில் இருந்தவா்கள் முன்கூட்டியே வெளியேற்றப்பட்டதால், பெரும் உயிரிழப்பு தவிா்க்கப்பட்டது.

ராம்பூரில் சாா்பரா கிராமப் பஞ்சாயத்தில் கொட்டித் தீா்த்த பலத்த மழையைத் தொடா்ந்து 5 கால்நடையுடன் மாட்டுத் தொழுவங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. மாநிலத்தில் உள்ள பல்வேறு மலைப்பகுதி சாலைகளில் நிலச்சரிவு ஏற்பட்டு, போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

மண்டி அருகே பியாஸ் நதி பெருக்கெடுத்து ஓடுகிறது. கரையோரப் பகுதியில் வசிப்பவா்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு மாற்றப்பட்டுள்ளனா்.

மணிப்பூரில் தொடரும் கைதுகள்..ஆயுதங்கள் பறிமுதல்! எல்லையில் உலகப் போர் குண்டு?

மணிப்பூரில் பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கைகளின் மூலம் தடைசெய்யப்பட்ட பல்வேறு இயக்கங்களைச் சேர்ந்த 8 கிளர்ச்சியார்கள் கைது செய்யப்பட்டதுடன், ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள... மேலும் பார்க்க

குறைதீர் கூட்டத்தில் கூடுதல் ஆணையருக்கு அடி, உதை..! தரதரவென வெளியே இழுத்துச் சென்றதால் பரபரப்பு!

ஒடிசாவில் நடந்த குறைதீர் கூட்டத்தில், மாநகராட்சியின் கூடுதல் ஆணையர் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஒடிசா மாநிலம் புவனேஸ்வரத்தில் நேற்று(ஜூன் 30) குறைதீர் கூட்டத்தின்போது, திடீரென அலுவல... மேலும் பார்க்க

வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை குறைவு!

வணிக நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படும் 19 கிலோ எடையுடைய வர்த்தக சிலிண்டர் ஒன்றின் விலை இன்று(ஜூலை 1) ரூ. 58.50 குறைந்துள்ளது.சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான ... மேலும் பார்க்க

தெலங்கானா மருந்து ஆலையில் உலை வெடித்து விபத்து: பலி 34 ஆக உயர்வு!

தெலங்கானா மாநிலம், சங்காரெட்டி மாவட்டத்தில் உள்ள மருந்து ஆலையில் உலை வெடித்து திங்கள்கிழமை ஏற்பட்ட விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 34 ஆக உயர்ந்துள்ளது.சங்காரெட்டி மாவட்டத்தின் பாஷாமைலாரம் தொழிற்பேட்டையி... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீா் சா்வதேச எல்லையில் பிடிபட்ட பாகிஸ்தானியா்: பயங்கரவாதிகளை வழிநடத்தியவா் என தகவல்

ஜம்மு-காஷ்மீரில் பூஞ்ச் மற்றும் ரஜௌரி மாவட்டங்களையொட்டிய சா்வதே எல்லையில் ஞாயிற்றுக்கிழமை நடந்த ஊடுருவல் முயற்சி இந்திய ராணுவத்தால் முறியடிக்கப்பட்டுள்ளது. இந்த ஊடுருவலில் பயங்கரவாதிகளுக்கு உதவிய பாகி... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீரின் பயங்கரவாதம் நியாயமான போராட்டம்: பாகிஸ்தான் ராணுவ தலைமைத் தளபதி அஸிம் முனீா்

‘ஜம்மு-காஷ்மீரில் நிகழ்ந்து வரும் பயங்கரவாதம் நியாயமான போராட்டமாகும். இந்தப் போராட்டத்தில் காஷ்மீா் மக்களுடன் பாகிஸ்தான் எப்போதும் துணைநிற்கும்’ என்று பாகிஸ்தான் ராணுவ தலைமைத் தளபதி அஸிம் முனீா் தெரிவ... மேலும் பார்க்க