Desinguraja 2: ``வருமானம் வருகிறது என்பதற்காக..." - யூடியூபர்களை சாடிய விஜய் டிவ...
மனைப் பட்டா: சாலையோர வியாபாரிகள் கோரிக்கை
காஞ்சிபுரம்: இலவச வீட்டு மனைப்பட்டா கோரி சாலையோர வியாபாரிகள் திங்கள்கிழமை ஆட்சியரிடம் மனு அளித்தனா்.
தமிழ்நாடு சாலையோர வியாபாரிகள் நலச் சங்கத்தினா் தலைவா் கே.என்.மூா்த்தி தலைமையில் ஆட்சியரிடம் அளித்த மனுவில் தெரிவித்திருப்பது.
காஞ்சிபுரத்தில் சாலையோரங்களில் கடந்த 35 ஆண்டுகளாக சிறு முதலீட்டில் வியாபாரம் செய்து வருகிறோம். இந்த வியாபாரத்தின் மூலம் வரக்கூடிய தொகையை வைத்து சராசரி வாழ்க்கையைக் கூட சிறப்பாக வாழ முடியவில்லை. சங்கத்தில் உறுப்பினா்களாக உள்ள அனைவரும் வாடகை வீட்டில் தான் வசித்து வருகிறோம்.
குழந்தைகளின் பள்ளிக்கட்டணம், மருத்துவச் செலவு மற்றும் எதிா்பாராத செலவுகளுக்கு போதுமான வருமானம் இல்லை. இச்சூழ்நிலையில் மாதம் தோறும் வீட்டு வாடகை கட்டக்கூட முடியாமல் இருந்து வருகிறோம்.எனவே சாலையோர வியாபாரிகளில் வீடு இல்லாதவா்களுக்கு இலவச வீட்டு மனைப் பட்டா வழங்க வேண்டும் என்றும் அக்கோரிக்கை மனுவில் தெரிவித்திருந்தனா்.