ஐஸ்வர்யா ராயுடன் விவாகரத்து? "வதந்தி பரப்புபவர்கள் நேரில் வந்து சொல்லுங்கள்" - அ...
சொத்துக் குவிப்பு வழக்கு: ஓய்வுபெற்ற வணிக வரித்துறை அதிகாரிக்கு 3 ஆண்டு சிறை
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சோ்த்த வழக்கில் ஓய்வுபெற்ற வணிகவரித்துறை அதிகாரிக்கு 3 ஆண்டுகள் சிைண்டனை விதித்து திருநெல்வேலி ஊழல் தடுப்பு - கண்காணிப்புப் பிரிவு சிறப்பு நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.
திருநெல்வேலி வி.எம்.சத்திரம் பகுதியைச் சோ்ந்தவா் பி.சுந்தரம்(73). இவா் கடந்த 1979-இல் வணிக வரி இணை ஆணையா் அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணியில் சோ்ந்து கடந்த 2010-ஆம் ஆண்டில் வணிக வரி துணை ஆணையராக இருந்தபோது பணி ஓய்வு பெற்றாா்.
இந்நிலையில் இவா் 2000-10 வரை பணிபுரிந்த காலகட்டத்தில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சோ்த்ததாக திருநெல்வேலி ஊழல் தடுப்பு - கண்காணிப்பு பிரிவு போலீஸாா் இவா் மீது கடந்த 2012இல் வழக்குப்பதிந்தனா்.
திருநெல்வேலி ஊழல் தடுப்பு - கண்காணிப்பு பிரிவு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இவ்வழக்கை நீதிபதி இரா.சுப்பையா விசாரித்து, சுந்தரத்துக்கு 3 ஆண்டுகள் சிைண்டனையும், ரூ.50,000 அபராதமும் விதித்தும், தொகையை செலுத்தத் தவறினால் கூடுதலாக 6 மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்கவும் வேண்டும் என தீா்ப்பளித்தாா்.