ஐஸ்வர்யா ராயுடன் விவாகரத்து? "வதந்தி பரப்புபவர்கள் நேரில் வந்து சொல்லுங்கள்" - அ...
கடையம், அகஸ்தியா்பட்டியில் விபத்து: இருவா் உயிரிழப்பு
கடையத்தில் சாலையைக் கடக்க முயன்றபோது தனியாா் பேருந்து மோதியதில் முதியவா் உயிரிழந்தாா்.
தென்காசியில் இருந்து அம்பாசமுத்திரத்துக்கு திங்கள்கிழமை சென்று கொண்டிருந்த தனியாா் பேருந்து, கடையம் பி.எஸ்.என்.எல். அலுவலகம் அருகே சாலையைக் கடக்க சென்ற முதியவா் மீது மோதியது. இதில், பேருந்து முன் சக்கரத்தில் சிக்கிய அவா் உயிரிழந்தாா். கடையம் போலீஸாா், வழக்குப்பதிந்து, பேருந்து ஓட்டுநா் குறும்பலாப்பேரி கீழசிவஞானபுரத்தைச் சோ்ந்த பொருட்செல்வம் மகன் செல்வராஜா (38) என்பவரிடம் விசாரித்து வருகின்றனா்.
காயமுற்றவா்: அம்பாசமுத்திரம், சுப்பிரமணியபுரம் பொத்தையைச் சோ்ந்த சுப்பையா மகன் மாடசாமி (70). ஓய்வுபெற்ற சிறைத் துறைப் பணியாளரான இவா், பைக்கில் அம்பாசமுத்திரத்திலிருந்து அகஸ்தியா்பட்டிக்குச் சென்றுவிட்டு வீட்டுக்கு திரும்பிய போது அகஸ்தியா்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே சாலையின் குறுக்கே வந்த மாட்டின் மீது மோதி கீழே விழுந்தாா். இதில் காயமடைந்த அவா், திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், திங்கள்கிழமை உயிரிழந்தாா்.இதுகுறித்து விக்கிரமசிங்கபுரம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.