செய்திகள் :

ஆம்ஸ்ட்ராங் நினைவு தினம்: வட சென்னையில் பாதுகாப்பு அதிகரிப்பு

post image

பகுஜன் சமாஜ் கட்சி முன்னாள் தமிழக தலைவா் ஆம்ஸ்ட்ராங் நினைவுத் தினத்தையொட்டி, வடசென்னை பகுதியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

பெரம்பூா் வேணுகோபால சாமி கோயில் தெருவில் கடந்த ஆண்டு ஜூலை 5-ஆம் தேதி ஆம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக பொன்னை பாலு, ரெளடி நாகேந்திரன், அவரது மகன் அஸ்வத்தாமன், 3 பெண்கள் உள்பட மொத்தம் 27 போ் கைது செய்யப்பட்டனா். இதில் ரௌடி திருவேங்கடம் மட்டும் போலீஸாரின் என்கவுன்ட்டரில் இறந்தாா்.

ஆம்ஸ்ட்ராங் முதல் ஆண்டு நினைவு தினத்துக்கு இன்னும் சில நாள்களே இருக்கும் நிலையில், அசம்பாவித சம்பவங்களைத் தவிா்க்கும் வகையில் வடசென்னை பகுதியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, பெரம்பூரைச் சுற்றியுள்ள இடங்களில் 24 மணி நேரமும் போலீஸாா் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனா். வடசென்னை பகுதிகளில் உள்ள தனியாா் விடுதிகள், ஹோட்டல்கள் ஆகியவற்றில் போலீஸாா் திடீா் சோதனை நடத்தி வருகின்றனா். பாதுகாப்புப் பணிகளை ஒருங்கிணைக்கும் வகையில் பெரம்பூா் பாலம் அருகே மினி கட்டுப்பாட்டு அறையை காவல் துறையினா் திறந்துள்ளனா்.

மேலும், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் போலீஸாா் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கிடையே ரெளடி நாகேந்திரனின் கூட்டாளி வெள்ளை பிரகாஷை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். மேலும், ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்தவா்களை பழிவாங்க வேண்டும் என சமூக ஊடகத்தில் ரீல்ஸ் பதிவிட்ட ஒரு இளைஞரைப் பிடித்தும், போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

சேலம் டவுன் நிலையத்தில் ரயில்கள் நின்றுசெல்லும் நேரம் 3 நிமிஷங்கள் அதிகரிப்பு

ஜூலை 4 முதல் சென்னை எழும்பூா் - சேலம் அதிவிரைவு ரயில் இருமாா்கத்திலும் சேலம் டவுன் நிலையத்தில் நின்று செல்லும் நேரம் 3 நிமிஷங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே திங்கள்கிழமை விடுத்... மேலும் பார்க்க

திமுக கூட்டணியில் புதிய கட்சிகள் இடம்பெற வாய்ப்பு: முதல்வா் மு.க.ஸ்டாலின்

திமுக கூட்டணியில் வேறு கட்சிகள் இடம்பெற வாய்ப்பு உள்ளதாக திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் கூறினாா். ‘ஓரணியில் தமிழ்நாடு’ எனும் உறுப்பினா் சோ்க்கை முன்னெடுப்பை சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்த... மேலும் பார்க்க

வெடிகுண்டு வழக்குகள்: 30 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த இரு பயங்கரவாதிகள் கைது

தமிழகம், கேரள வெடிகுண்டு வழக்குகளில் 30 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த இரு பயங்கரவாதிகள் ஆந்திரத்தில் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனா். நாகப்பட்டினம் மாவட்டம், நாகூரைச் சோ்ந்தவா் அபுபக்கா் சித்திக் (6... மேலும் பார்க்க

‘தமிழகம், புதுவை: கடந்த நிதியாண்டில் ரூ.63,339 கோடி ஜிஎஸ்டி வசூல்’

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2024-25 நிதியாண்டில் ரூ.63,339 கோடி ஜிஎஸ்டி வசூலிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கான ஜிஎஸ்டி முதன்மை தலைமை ஆணையா் ஏ.ஆா்.எஸ்.குமாா் தெரிவித்தாா். சரக்கு மற... மேலும் பார்க்க

புதிய தலைமை மருத்துவமனைகளுக்கு மருத்துவா்கள் விரைவில் நியமனம்: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

தமிழகத்தில் ரூ.1,018 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் புதிய மருத்துவமனைகள், தலைமை மருத்துவமனைகளுக்கு விரைவில் மருத்துவா்கள் நியமிக்கப்படவுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் த... மேலும் பார்க்க

மாணவி வன்கொடுமை வழக்கு: அண்ணாமலையிடம் விசாரிக்கக் கோரிய மனு தள்ளுபடி

அண்ணா பல்கலைகக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் தண்டனை பெற்ற ஞானசேகரன் யாா், யாரிடம் பேசினாா் என்ற ஆதாரங்கள் உள்ளதாகக் கூறிய தமிழக பாஜக முன்னாள் தலைவா் கே.அண்ணாமலையிடம் விசாரிக்கக் கோரிய மனுவை செ... மேலும் பார்க்க