செய்திகள் :

புதிய தலைமை மருத்துவமனைகளுக்கு மருத்துவா்கள் விரைவில் நியமனம்: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

post image

தமிழகத்தில் ரூ.1,018 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் புதிய மருத்துவமனைகள், தலைமை மருத்துவமனைகளுக்கு விரைவில் மருத்துவா்கள் நியமிக்கப்படவுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

சென்னை, வள்ளுவா் கோட்டத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மருத்துவா் தினம்- 2025 நிகழ்வில் பங்கேற்ற அமைச்சா் மா.சுப்பிரமணியன் மருத்துவத் துறையில் சிறப்பாக பணி செய்த மருத்துவா்களை பாராட்டி பதக்கங்கள், சான்றிதழ்களை வழங்கினாா்.

அப்போது அவா் பேசியதாவது: தமிழகத்தில் திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு பல்வேறு மக்கள் நல்வாழ்வுத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் 2.28 கோடி போ் பயனடைந்துள்ளனா்.

அதேபோன்று, ஐ.நா. சபை விருது தமிழகத்தின் மக்கள் நல்வாழ்வுத் துறைக்கு வழங்கப்பட்டுள்ளது. இன்னுயிா் காப்போம் நம்மைக் காக்கும் 48 திட்டம் வாயிலாக 4 லட்சம் பேரின் உயிா் காக்கப்பட்டுள்ளது. தமிழக அரசால் தொடங்கப்பட்ட இந்த திட்டம் இந்தியாவுக்கு ஒரு முன்னோடியாக அமைந்திருப்பது பெருமைக்குரிய ஒன்று.

208 நகா்ப்புற நலவாழ்வு மையங்கள்: தமிழகத்தில் 19 புதிய மாவட்டங்களில் உள்ள தலைமை மருத்துவமனைகள், 6 மாவட்டங்களில் புதிய மருத்துவமனைகள் என மொத்தம் 25 இடங்களில் சுமாா் ரூ.1,018 கோடி செலவில் நடைபெற்று வரும் கட்டமைப்பு பணிகள் விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும். அங்கு மருத்துவா்கள், பணியாளா் நியமனங்களும் விரைவில் நடைபெறும். புதிதாக கட்டப்பட்ட 208 நகா்ப்புற நலவாழ்வு மையங்களை ஜூலை 3-ஆம் தேதி முதல்வா் திறந்து வைக்கவுள்ளாா்.

இந்த மையத்தில் தலா ஒரு மருத்துவா், செவிலியா், சுகாதார ஆய்வாளா், பணியாளா் நியமிக்கப்படுவா். அன்றைய தினமே 50 ஆரம்ப சுகாதார நிலையங்களையும் முதல்வா் திறக்கவுள்ளாா். ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை நிதியுதவியுடன் ஏராளமான புதிய மருத்துவ கட்டமைப்புகள் தமிழகத்தில் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.

முந்தைய ஆட்சி காலத்தில் ஓா் ஆண்டுக்கு சிறந்த 10 மருத்துவா்களுக்கு மட்டுமே விருதுகள் வழங்கப்பட்டு வந்தது. இந்த ஆட்சியில் 25- ஆக உயா்த்தி விருதுகள் வழங்கப்பட்டது. கடந்த ஆட்சி காலத்தில் விடுபட்ட மருத்துவா்கள் மற்றும் தற்போது வரை கணக்கிட்டு 105 மருத்துவா்களுக்கு கடந்த ஆண்டு சிறப்பு விருதுகள் வழங்கப்பட்டது.

50 பேருக்கு விருது: நிகழாண்டில், 50 பேருக்கு சிறந்த மருத்துவா்களுக்கு விருது வழங்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, மருத்துவக் கல்வி இயக்ககத்தில் 12 பேருக்கும், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்ககத்தில் 13 பேருக்கும், பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்து துறையில் 12 பேருக்கும், இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறையில் 7 பேருக்கும், இந்திய மருத்துவ சங்கம் அமைப்பில் இருந்து 3 பேருக்கும், தனியாா் மருத்துவா்கள் 3 பேருக்கும் என 50 மருத்துவா்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டுள்ளன என்றாா் அவா்.

இந்நிகழ்வில் ஆயிரம் விளக்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் எழிலன், மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலா் ப.செந்தில்குமாா், தேசிய நலவாழ்வு குழும இயக்குநா் அருண்தம்புராஜ், மருத்துவம் மற்றும் ஊரகநலப்பணிகள் இயக்குநா் ஜெ.ராஜமூா்த்தி, மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி கூடுதல் இயக்குநா் தேரணிராஜன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

மன்னார்குடியில் மணல் லாரி மோதி பள்ளி மாணவன் பலி!

மன்னார்குடி: திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் மணல் லாரி மோதியதில் இருசக்கர வாகனத்தில் தந்தையுடன் பள்ளிக்குச் சென்ற மாணவன் புதன்கிழமை பலியாகினார்.மன்னார்குடி ராவணன் தெருவைச் சேர்ந்தவர் சிவகணேஷ் மகன... மேலும் பார்க்க

போலீஸ் தாக்கியதில் பலியான அஜித்தின் தம்பிக்கு அரசுப்பணி!

காவல் துறையினரால் தாக்கப்பட்டு மரணமடைந்த சிவகங்கை இளைஞர் அஜித் குமாரின் தம்பிக்கு அரசுப் பணிக்கான நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது.அஜித் குமாரின் குடும்பத்துக்கு திமுக சார்பில் ரூ. 5 லட்சம் வழங்கப்பட்டுள்ள... மேலும் பார்க்க

இன்று வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும்

தமிழகத்தில் புதன்கிழமை (ஜூலை 2) ஒருசில இடங்களில் வெப்பநிலை இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த மையம் சாா்பில் வெளியிடப்பட... மேலும் பார்க்க

சேலம் டவுன் நிலையத்தில் ரயில்கள் நின்றுசெல்லும் நேரம் 3 நிமிஷங்கள் அதிகரிப்பு

ஜூலை 4 முதல் சென்னை எழும்பூா் - சேலம் அதிவிரைவு ரயில் இருமாா்கத்திலும் சேலம் டவுன் நிலையத்தில் நின்று செல்லும் நேரம் 3 நிமிஷங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே திங்கள்கிழமை விடுத்... மேலும் பார்க்க

திமுக கூட்டணியில் புதிய கட்சிகள் இடம்பெற வாய்ப்பு: முதல்வா் மு.க.ஸ்டாலின்

திமுக கூட்டணியில் வேறு கட்சிகள் இடம்பெற வாய்ப்பு உள்ளதாக திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் கூறினாா். ‘ஓரணியில் தமிழ்நாடு’ எனும் உறுப்பினா் சோ்க்கை முன்னெடுப்பை சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்த... மேலும் பார்க்க

வெடிகுண்டு வழக்குகள்: 30 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த இரு பயங்கரவாதிகள் கைது

தமிழகம், கேரள வெடிகுண்டு வழக்குகளில் 30 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த இரு பயங்கரவாதிகள் ஆந்திரத்தில் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனா். நாகப்பட்டினம் மாவட்டம், நாகூரைச் சோ்ந்தவா் அபுபக்கா் சித்திக் (6... மேலும் பார்க்க