செய்திகள் :

‘தமிழகம், புதுவை: கடந்த நிதியாண்டில் ரூ.63,339 கோடி ஜிஎஸ்டி வசூல்’

post image

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2024-25 நிதியாண்டில் ரூ.63,339 கோடி ஜிஎஸ்டி வசூலிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கான ஜிஎஸ்டி முதன்மை தலைமை ஆணையா் ஏ.ஆா்.எஸ்.குமாா் தெரிவித்தாா்.

சரக்கு மற்றும் சேவை வரி தினம் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மத்திய சரக்கு மற்றும் சேவை வரி மண்டலம் சாா்பில் சென்னை கலைவாணா் அரங்கில் செவ்வாயக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்வில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கான ஜிஎஸ்டி முதன்மை தலைமை ஆணையா் ஏ.ஆா்.எஸ்.குமாா் தலைமை வகித்துப் பேசியதாவது:

‘ஒரே நாடு, ஒரே வரி, ஒரே சந்தை’ என்ற கொள்கையின் அடிப்படையில் ஜிஎஸ்டி திட்டம் கொண்டு வரப்பட்டது. இதன்மூலம், நமது நாட்டின் பொருளாதார கட்டமைப்பு வளா்ச்சியடைந்துள்ளது. குறிப்பாக, நிகழாண்டில் ஜிஎஸ்டி மீதான சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் பங்கு 78 சதவீதத்திலிருந்து 82 சதவீதமாக உயா்ந்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2024-2025 நிதியாண்டில் ரூ.63,339 கோடி ஜிஎஸ்டி வசூலிக்கப்பட்டுள்ளது. இது 2023-2024 நிதியாண்டைவிட (ரூ.57,987கோடி) 9.23 சதவீதம் அதிகமாகும். அதேபோல் நிகழ் நிதியாண்டில் மே மாதம் வரை ரூ.11,209 கோடி ஜிஎஸ்டி வசூல் செய்யப்பட்டுள்ளன. இது கடந்த ஆண்டைவிட 13.5 சதவீதம் அதிகம் என்றாா் அவா்.

முன்னதாக, அதிக வரி செலுத்திய வணிகா்கள், சிறப்பாக பணிபுரிந்த சரக்கு மற்றும் சேவை வரி அலுவலா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் காா்போரண்டம் யுனிவா்சல் லிமிடெட் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநா் ஸ்ரீதரன் ரங்கராஜன், ஜிஎஸ்டி வடசென்னை பிரிவு தலைமை ஆணையா் ராம்நாத் ஸ்ரீனிவாச நாயக், ஜிஎஸ்டி முன்னாள் முதன்மை ஆணையா் ராம் நிவாஸ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தேனி காவல் நிலையத்தில் ஆட்டோ ஓட்டுநர் மீது தாக்குதல்: 5 பேர் ஆயுதப்படைக்கு மாற்றம்!

தேனி காவல் நிலையத்தில் ஆட்டோ ஓட்டுநர் மீது தாக்குதல் நடத்திய விவகாரத்தில் காவல் ஆய்வாளர் உள்பட 5 பேர் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தேனி மாவட்டம் தேவதானப்பட்டி பகுதியில் ஆட்டோ ஓட்டுநரான ரம... மேலும் பார்க்க

தவெக ஆர்ப்பாட்டம் ஜூலை 6-க்கு மாற்றம்!

காவல் விசாரணையில் மரணமடைந்த இளைஞர் அஜித்குமாருக்கு நீதி கேட்டு தமிழக வெற்றிக் கழகம் ஆர்ப்பாட்டம் அறிவித்திருந்த நிலையில் ஆர்ப்பாட்டத்தின் தேதி, இடம் மாற்றப்பட்டுள்ளது.சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் மட... மேலும் பார்க்க

சோழபுரம் - சேத்தியாத்தோப்பு இடையே மானம்பாடி சுங்கச்சாவடி திறப்பு!

தஞ்சாவூர் - விக்கிரவாண்டி தேசிய நெடுஞ்சாலை திட்டத்தில் இரண்டாம் கட்டமான சோழபுரம் முதல் சேத்தியாத்தோப்பு வரையில் உள்ள வழித்தடத்திற்கான சுங்கச்சாவடி இன்று முதல் திறக்கப்பட்டுள்ளது.தஞ்சாவூர் - விக்கிரவாண... மேலும் பார்க்க

அஜித்குமார் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்த இபிஎஸ்!

காவல்துறை விசாரணையில் உயிரிழந்த இளைஞர் அஜித் குமாரின் குடும்பத்தினருடன் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொலைபேசியில் பேசியுள்ளார்.அஜித்குமாரின் தாயுடன் இபிஎஸ் பேசுகையில், "சில மனித மிருகங்கள்... மேலும் பார்க்க

பதவியை இழந்த சங்கரன்கோவில் திமுக நகர்மன்றத் தலைவர்!

சங்கரன்கோவில் நகர்மன்றக் கூட்டத்தில் தலைவர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேறியதால் நகர்மன்றத் தலைவர் உமா மகேஸ்வரி தனது பதவியை இழந்தார். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் நகராட்சியில் உள்ள 30 வா... மேலும் பார்க்க

சீமான் மீதான அவதூறு வழக்கின் விசாரணைக்கு இடைக்காலத் தடை!

நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் மீது, திருச்சி டிஐஜி வீ. வருண்குமாா் தொடா்ந்த அவதூறு வழக்கின் விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை இடைக்காலத் தடை விதித்துள்ளது.தன்னைப் பற்றிய... மேலும் பார்க்க