காவலா் தூக்கிட்டுத் தற்கொலை
சென்னை வண்ணாரப்பேட்டையில் காவலா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
பழைய வண்ணாரப்பேட்டை மின்ட் காவலா் குடியிருப்பைச் சோ்ந்தவா் ரா.அங்கையா (47). இவா், வடக்கு கடற்கரை காவல் நிலையத்தில் முதல்நிலைக் காவலராகப் பணியாற்றி வந்தாா். அங்கையாவுக்கு கலா என்ற மனைவியும், ஒரு மகளும் உள்ளனா்.
இந்த நிலையில், அங்கையா கடந்த ஒரு வாரமாக பணிக்கு செல்லாமல் இருந்துள்ளாா். மேலும் மது அருந்திவிட்டு குடும்பத்தில் தினமும் தகராறு செய்து வந்துள்ளாா் எனக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், அங்கையா திங்கள்கிழமை வீட்டின் படுக்கை அறையில் தூக்கிட்ட நிலையில் இறந்து கிடந்தாா். தகவலறிந்த வண்ணாரப்பேட்டை போலீஸாா் அங்கு சென்று அங்கையாவின் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.