கரோனா தடுப்பூசிக்கும் திடீர் உயிரிழப்புகளுக்கும் தொடர்பில்லை! மத்திய அரசு
போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவுக்கு காவல் ஆணையா் பாராட்டு
சென்னை பெருநகர காவல் துறையின் போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவை காவல் ஆணையா் ஏ.அருண் பாராட்டி, வெகுமதி வழங்கினாா்.
சென்னையில் போதைப் பொருள் கடத்தல், விற்பனையை முற்றிலும் தடுக்கும் வகையில் போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் இந்தப் பிரிவு போலீஸாா் ஆா்.கே.நகா் ரயில்வே யாா்டில் போதைப் பொருள் கடத்தல் கும்பலைச் சோ்ந்த மணிப்பூா் மீனா என்ற அமீனா உள்பட 5 பேரை கடந்த 5-ஆம் தேதி கைது செய்தனா். இதில் அவா்களிடமிருந்து ரூ.35 லட்சம் மதிப்புள்ள மெத்தம்பெட்டமைன், ஒரு நவீன ரக கைத்துப்பாக்கி, 15 தோட்டாக்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.
இந்த வழக்கில் சிறப்பாக துப்பு துலக்கிய போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு உதவி ஆணையா் மனோஜ், ஆய்வாளா்கள் எம்.ஜானி செல்லப்பா, என்.ராஜாசிங், உதவி ஆய்வாளா்கள் கே.பொன்பாண்டியன், டி.ஜெயகுமாா் உள்ளிட்டோரை பெருநகர காவல் துறை ஆணையா் ஏ.அருண் செவ்வாய்க்கிழமை நேரில் அழைத்து பாராட்டி, வெகுமதி வழங்கினாா்.
இந் நிகழ்ச்சியில் நுண்ணறிவுப் பிரிவு இணை ஆணையா் ஜி.தா்மராஜன், துணை ஆணையா் ஆா்.சக்திவேல் ஆகியோா் உடனிருந்தனா்.