செய்திகள் :

'ஐ லவ் யூ' கூறுவது பாலியல் குற்றம் ஆகாது: மும்பை உயர்நீதிமன்ற கிளை

post image

மும்பை: 'ஐ லவ் யூ' எனக் கூறுவது பாலியல் குற்றம் ஆகாது என கருத்து தெரிவித்துள்ள மும்பை உயர்நீதிமன்ற நாக்பூப் கிளை, வாலிபருக்கு நாக்பூர் அமர்வு நீதிமன்றம் வழங்கிய மூன்று ஆண்டு சிறைத்தண்டனையை ரத்து செய்தது.

கடந்த 2015 ஆம் ஆண்டு அக்டோபர் 23 ஆம் தேதி மகாராஷ்டிரம் மாநிலம் நாக்பூரில் பள்ளி பேருந்தில் இருந்து இறங்கி வீடு திரும்பிக் கொண்டிருந்த 17 வயது சிறுமியை வழி மறித்து மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு வாலிபர் "நான் உன்னை நேசிக்கிறேன்" (ஐ லவ் யூ) கூறியுள்ளார். இதுகுறித்து சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து அவரது பெற்றொர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரைத் தொடர்ந்து வாலிபர் மீது இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் போக்சோ சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நாக்பூர் அமர்வு நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்ட வாலிபருக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து 2017 ஆம் ஆண்டு தீர்ப்பு வழங்கியது.

நாக்பூர் அமர்வு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து அந்த வாலிபர் தரப்பில் மும்பை உயர்நீதிமன்ற நாக்பூர் கிளையில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிபதி ஊர்மிளா ஜோஷி பால்கே தலைமையிலான அமர்வு, வாலிபருக்கு கீழ் நீதிமன்றம் விதித்த மூன்றாண்டு சிறைத் தண்டனையை ரத்து செய்து தீர்ப்பளித்தது.

நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் கூறியிருப்பதாவது:

'ஐ லவ் யூ' என்ற வாலிபர் தனது உணர்வை வெளிப்படுத்தியதன் பின்னணியில் பாலியல் நோக்கம் இருப்பதற்கான எந்த சூழலும் இல்லை. தகாத முறையில் தொடுதல், வலுக்கட்டாயமாக ஆடைகளை கழற்றுதல், அநாகரிகமான சைகைகளை செய்தல் அல்லது பெண்களை அவமதிப்பது, ஆபாசமாக நடந்து கொள்வது போன்றவைகள்தான் பாலியல் குற்றங்களாகும்.

இந்த வழக்கில் பாலியல் நோக்கம் இருப்பதற்கான எந்தொரு ஆதாரமும் இல்லை. எனவே, 'ஐ லவ் யூ' என்று கூறுவது மானபங்கம் அல்லது பாலியல் வன்கொடுமையின் கீழ் வராது. "யாராவது ஒருவர் இன்னொருவரை நேசிப்பதாகச் சொன்னாலோ அல்லது தனது உணர்வுகளை வெளிப்படுத்தினாலோ அது ஒருவித பாலியல் நோக்கம் இருக்க வேண்டியதற்கான அவசியமில்லை."

மேலும், குற்றம் சாட்டப்பட்டவரின் மனநிலையை உறுதிப்படுத்த, பாதிக்கப்பட்டவருடன் பாலியல் தொடர்பை ஏற்படுத்துவதே குற்றம் சாட்டப்பட்டவரின் உண்மையான நோக்கம் என்பதைக் குறிக்கும் எந்த ஒரு சூழ்நிலையும் இல்லை.

"பாலியல் வன்கொடுமை என்பது நியாயமான சந்தேகத்திற்கு அப்பாற்பட்டது என்று நிரூபிக்கப்படவில்லை" என்றும், அதே நேரத்தில் விசாரணை நீதிமன்ற நீதிபதி போக்சோ சட்டத்தின் கீழ் கொடுக்கப்பட்ட "பாலியல் வன்கொடுமை" என்பதன் வரையறை மற்றும் தண்டனையை கருத்தில் கொள்ளவில்லை என்றும், சட்ட விதிகளின் உண்மையான அர்த்தத்தை கருத்தில் கொள்ளாமல், குற்றம் சாட்டப்பட்டவரை குற்றவாளி என்று தீர்ப்பளித்தது தவறானது. எனவே, சம்மந்தப்பட்ட வாலிபருக்கு கீழ் நீதிமன்றம் விதித்த சிறைத் தண்டனையை ரத்து செய்ததுடன் சிறுமியிடம் 'ஐ லவ் யூ' என்று கூறிய வாலிபரை உயர்நீதிமன்றம் விடுதலை செய்து செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

பாலியல் வன்கொடுமை குறித்து சா்ச்சை கருத்து: மன்னிப்புக் கோரினாா் திரிணமூல் தலைவா்

Summary

"The sexual assault without penetration has not been proved by the prosecution beyond reasonable doubt," said the bench, while adding that the Judge of the trial court had not considered the definition and punishment of "sexual assault" given under the POCSO Act, and without considering the true import of the provision, convicted the accused, which is erroneous.

அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சென்று சேர்க்க வேண்டும்: துணை முதல்வர்

வேலூர்: 30 சதவீத வாக்காளர்களை கழகத்தில் இணைக்க வேண்டும் என்ற கழகத் தலைவர் அவர்களின் ”ஓரணியில் தமிழ்நாடு” முன்னெடுப்பினை செயல்படுத்திட, திமுகவினர் அனைவரும் அரசினுடைய திட்டங்களை மக்களிடம் கொண்டு சென்று ... மேலும் பார்க்க

எவ்வளவு விமரிசனங்கள் வந்தாலும்.. என் கடன் பணி செய்து கிடப்பதே: முதல்வர் ஸ்டாலின்

“என் கடன் பணி செய்து கிடப்பதே” என்று நாம் தொடர்ந்து, உண்மையான பக்தர்களின் நலனுக்காக செயல்படுவோம் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறினார்.2025-2026 ஆம் நிதியாண்டிற்கான இந்து சமய அறநிலையத்துறை மானியக் கோ... மேலும் பார்க்க

அஜித்தின் சகோதரருக்கு கூட்டுறவு பால் சங்கத்தில் பணி

காவல்துறை விசாரணையின்போது உயிரிழந்த மடப்புரம் கோயில் காவலாளி அஜித்தின் சகோதரர் நவீனுக்கு கூட்டுறவு பால் சங்கத்தில் டெக்னீசியன் பணிக்கான நியமன ஆணையை கூட்டுறவுத்துறை அமைச்சர் கே. ஆர். பெரியகருப்பன் ந... மேலும் பார்க்க

உங்கள் வன்மம் எங்களை ஒன்றும் செய்யாது: முதல்வர் ஸ்டாலின்

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினை விமரிசனம் செய்து வார பத்திரிகை ஒன்றில் கேலிச்சித்திரம்(கார்ட்டூன்) வெளியாகியுள்ள நிலையில், பல ஆண்டுகால வன்மத்தால் என்னை விமரிசனம் செய்து கேலிச்சித்திரம் வெளியிடுவதாக முத... மேலும் பார்க்க

எலான் மஸ்க்கை நாடு கடத்த முடிவா..? டிரம்ப் கூறுவதென்ன?

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க்கை நாடு கடத்துவது குறித்த கேள்விக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் கருத்துகள் வெளியாகியிருக்கின்றன. வரிகுறைப்பு மற்றும் செலவின மசோதாக்கள் குறித்து விமர்சித்த ஸ்... மேலும் பார்க்க

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!

கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு கடிதம் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ள நிலையில் வெடிகுண்டு தடுப்புப் பிரிவு போலீஸாா் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பழையது, புதிய... மேலும் பார்க்க