செய்திகள் :

உங்கள் வன்மம் எங்களை ஒன்றும் செய்யாது: முதல்வர் ஸ்டாலின்

post image

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினை விமரிசனம் செய்து வார பத்திரிகை ஒன்றில் கேலிச்சித்திரம்(கார்ட்டூன்) வெளியாகியுள்ள நிலையில், பல ஆண்டுகால வன்மத்தால் என்னை விமரிசனம் செய்து கேலிச்சித்திரம் வெளியிடுவதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

என்னை, அமைச்சர்களை விமரிசனம் செய்து வெளியிட்டுள்ள கேலிச்சித்திரத்தால் என சிரிப்பு வரவில்லை, பரிதாபமாகதான் இருந்தது. பக்திதான் அவர்களது நோக்கம் எனில் ஆன்மீகத்திற்கு அரசு செய்த நன்மைகளை பட்டியலிட்டிருக்கலாம் என தெரிவித்தார்.

சென்னை ராஜா அண்ணாமலைபுரம் அருள்மிகு கபாலீசுவரர் கற்பகாம்பாள் திருமண மண்டபத்தில், பொருளாதாரத்தில் பின்தங்கிய 32 இணைகளுக்கு திருமணம் நடத்தி வைத்து, மணமக்களை வாழ்த்தினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

திருமணம் செய்து கொண்ட 32 இணைகளுக்கும் 4 கிராம் தங்கத் தாலி உள்பட ரூ.60 ஆயிரம் மதிப்பிலான சீர்வரிசைகள் வழங்கப்பட்டது.

பின்னர் பேசிய முதல்வர் ஸ்டாலின், அரசு துறைகளிலேயே நான் இந்து அறநிலையத்துறை நிகழ்ச்சியில்தான் அதிகம் பங்கேற்கிறேன். அறநிலையத்துறை சார்பில் 2,376 இணையர்களுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளது. இதில் 150 திருமணங்களுக்கு நானே தலைமையேற்று நடத்தி வைத்துள்ளேன். இன்று ஓரே நாளில் 576 திருமணங்கள் நடத்தி வைத்து அந்த குடும்பங்களில் வாழ்வில் ஒளியேற்றியுள்ளது இந்து அறநிலையத்துறை. திராவிட மாடல் ஆட்சியில் 4 ஆண்டுகளில் இந்து அறநிலையத்துறை மகத்தான வளர்ச்சியை பெற்றுள்ளது.

பக்தர்கள் போற்றக்கூடிய அரசு

பக்தர்கள் போற்றக்கூடிய அரசாக திராவிட மாடல் ஆட்சி திகழ்கிறது. எந்த ஆட்சியிலும் இல்லாத அளவுக்கு 3,177 கோயில்களுக்கு குடமுழுக்கு, 997 திருக்கோயில்களுக்கு சொந்தமான 7,650 ஏக்கர் நிலங்கள் மீட்பு, ரூ.6 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் 26 ஆயிரம் கோயில்களில் திருப்பணிகள், 1000 ஆண்டுகள் பழமையான கோயில்கள் தொன்மை மாறாமல் புனரமைக்க ரூ.425 கோடி மானியம் வழங்கப்பட்டுள்ளது.

அனைத்து சாதியினருக்கும் அர்ச்சகராகலாம் என்ற திட்டத்தை செயல்படுத்தி இதுவரை 29 பயிற்சி பெற்ற அரச்சகர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது. 12 பெண் ஓதுவார்கள் உள்பட 46 ஓதுவார்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது. அன்னைத் தமிழில் வழிபாடு செய்யும் திட்டத்தை 295 கோயில்களில் செயல்படுத்தியுள்ளோம்.

பல ஆண்டுகால வன்மம்

என்னை, அமைச்சர்களை விமரிசனம் செய்து வார பத்திரிகை ஒன்றில் கேலிச்சித்திரம்(கார்ட்டூன்) வெளியாகியுள்ளது. அதை பார்த்து எனக்கு சிரிப்பு வரவில்லை, பரிதாபமாகதான் இருந்தது. பக்திதான் அவர்களது நோக்கம் எனில் ஆன்மீகத்திற்கு அரசு செய்த நன்மைகளை பட்டியலிட்டிருக்கலாம். ஆனால் அவர்களது நோக்கம் அது அல்ல, பல ஆண்டுகால வன்மம் அது. அந்த வன்மத்துக்கு வடிகால்தான் இதுபோன்ற கேலிச்சித்திரம்.

அவதூறுகளை கண்டு கவலைப்படுவதில்லை

வன்மத்தின் அடிப்படையில் வெளியிடப்பட்டும் இந்த அவதூறுகளை கண்டு ஒருபோதும் நான் கவலைப்படுவதில்லை. இவையெல்லாம் எங்களுக்கு ஊக்கம்தான் அளிக்கிறது. திருநாவுக்கரசர் மொழிக்கேற்ப, என் கடன் பணி செய்து கிடப்பதே! என்று மக்களுக்காக செயலாற்றுவோம். நாம் உண்மையான பக்தர்களின் நலனுக்காக தொடர்ந்து பணியாற்றுவோம். உண்மையான பக்தர்கள் நமது ஆட்சியின் ஆன்மிக தொண்டை பாராட்டுகிறார்கள் என்றார்.

இதையும் படிக்க | போலீஸ் தாக்கியதில் பலியான அஜித் குமாரின் தம்பிக்கு அரசுப்பணி!

Summary

Chief Minister Stalin has said that he is criticizing me and publishing a caricature because of years of malice

அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சென்று சேர்க்க வேண்டும்: துணை முதல்வர்

வேலூர்: 30 சதவீத வாக்காளர்களை கழகத்தில் இணைக்க வேண்டும் என்ற கழகத் தலைவர் அவர்களின் ”ஓரணியில் தமிழ்நாடு” முன்னெடுப்பினை செயல்படுத்திட, திமுகவினர் அனைவரும் அரசினுடைய திட்டங்களை மக்களிடம் கொண்டு சென்று ... மேலும் பார்க்க

எவ்வளவு விமரிசனங்கள் வந்தாலும்.. என் கடன் பணி செய்து கிடப்பதே: முதல்வர் ஸ்டாலின்

“என் கடன் பணி செய்து கிடப்பதே” என்று நாம் தொடர்ந்து, உண்மையான பக்தர்களின் நலனுக்காக செயல்படுவோம் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறினார்.2025-2026 ஆம் நிதியாண்டிற்கான இந்து சமய அறநிலையத்துறை மானியக் கோ... மேலும் பார்க்க

அஜித்தின் சகோதரருக்கு கூட்டுறவு பால் சங்கத்தில் பணி

காவல்துறை விசாரணையின்போது உயிரிழந்த மடப்புரம் கோயில் காவலாளி அஜித்தின் சகோதரர் நவீனுக்கு கூட்டுறவு பால் சங்கத்தில் டெக்னீசியன் பணிக்கான நியமன ஆணையை கூட்டுறவுத்துறை அமைச்சர் கே. ஆர். பெரியகருப்பன் ந... மேலும் பார்க்க

எலான் மஸ்க்கை நாடு கடத்த முடிவா..? டிரம்ப் கூறுவதென்ன?

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க்கை நாடு கடத்துவது குறித்த கேள்விக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் கருத்துகள் வெளியாகியிருக்கின்றன. வரிகுறைப்பு மற்றும் செலவின மசோதாக்கள் குறித்து விமர்சித்த ஸ்... மேலும் பார்க்க

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!

கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு கடிதம் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ள நிலையில் வெடிகுண்டு தடுப்புப் பிரிவு போலீஸாா் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பழையது, புதிய... மேலும் பார்க்க

பரமக்குடி-ராமநாதபுரம் நான்கு வழிச்சாலை: மோடிக்கு இபிஎஸ் நன்றி

தமிழ்நாட்டின் சாலை இணைப்புத் திட்டங்களுக்கும், பொருளாதார வளர்ச்சிக்கும் முன்னுரிமை வழங்கும் பிரதமர் நரேந்திர மோடிக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார்.பிரதமர் நரேந்... மேலும் பார்க்க