செய்திகள் :

``இந்தியாவுக்கு வரும் அமெரிக்க நிறுவனங்கள்?'' - ட்ரம்ப் சொல்லும் வர்த்தக ஒப்பந்தம் லாபமா?

post image

இந்தியா - அமெரிக்கா இடையே பெரிய வர்த்தக ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது என்று ட்ரம்ப் கூறி வருகிறார்.

இந்திய அரசின் பக்கத்தில் இருந்து இது வெறும் தகவலாகத் தான் வருகிறதே தவிர, உறுதியாக எதுவும் வெளியில் சொல்லப்படவில்லை.

இந்த ஒப்பந்தம் குறித்து ட்ரம்ப் மீண்டும் பேசியிருக்கிறார். அவர் கூறியிருப்பதாவது...

"இந்தியா உடன் ஒப்பந்தம் போட இருக்கிறோம் என்று நினைக்கிறேன். இந்த ஒப்பந்தம் வேறு மாதிரியாக இருக்கும். இந்த ஒப்பந்தத்தின் படி, நாம் இந்தியாவிற்குள் சென்று, அங்கு போட்டி போட முடியும். இதுவரை இந்தியா தன் நாட்டிற்குள் வேறு யாரையும் வர அனுமதித்ததில்லை.

மோடி, ட்ரம்ப்
மோடி, ட்ரம்ப்

ஆனால், இந்தியா இனி அதை செய்யும் என்று நினைக்கிறேன். அதை அவர்கள் செய்தால் என்றால், அவர்களுக்கு நாம் குறைந்த வரி விதிக்கும் ஒப்பந்தத்தை மேற்கொள்வோம்" என்று பேசியுள்ளார்.

இந்திய அரசு சொல்ல வேண்டும்!

மேலே கூறியது போல, இந்திய அரசு இந்த ஒப்பந்தம் குறித்து இதுவரை எதுவுமே வெளிப்படுத்தவில்லை.

இந்த ஒப்பந்தம் குறித்தே ட்ரம்ப் மூலம் தான் தெரிந்தது. 'உண்மையில் இப்படி ஒரு ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தை நடந்துவருகிறதா?' 'நடந்து வந்தால், அது எந்த மாதிரியான ஒப்பந்தமாக இருக்கும்?' என்று இந்திய அரசு தெரிவிக்க வேண்டும்.

அதிபர் ட்ரம்ப்
அதிபர் ட்ரம்ப்

ட்ரம்ப் கூறுவதுப்போல, அமெரிக்க நிறுவனங்கள் இந்தியாவிற்குள் அடியெடுத்து வைக்கப் போகிறதா என்றும் நமக்கு தெரிய வேண்டும். அப்படி வந்தால் இந்தியாவில் வேலைவாய்ப்பு, பொருளாதாரம் மேம்படும்.

இன்னொரு பக்கம், இந்திய நிறுவனங்கள் போட்டிகள் மிகவும் அதிகரிக்கும். அதனால், இந்திய நிறுவனங்கள் தன்னை தானே மேலும் மேம்படுத்த வேண்டும்.

Vijay : 'கொடூரமா இருக்கு... இப்படி நடக்கவே கூடாது!' - அஜித் குமாரின் குடும்பத்திடம் விஜய் உருக்கம்!

சிவகங்கை திருபுவனத்தில் காவல்துறை விசாரணையின் போது சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்டு உயிரிழந்த அஜித் குமாரின் வீட்டிற்கு நேரில் சென்று தவெக தலைவர் விஜய் ஆறுதல் சொல்லியிருக்கிறார். அஜித்தின் தாயிடமும் சகோதர... மேலும் பார்க்க

TVK : 'சிவகங்கையில் விஜய்; அஜித் குமாரின் குடும்பத்துக்கு நேரில் ஆறுதல்!'

சிவகங்கை திருபுவனத்தில் காவல்துறை விசாரணையின் போது சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்டு உயிரிழந்த அஜித் குமாரின் வீட்டிற்கு நேரில் சென்று தவெக தலைவர் விஜய் ஆறுதல் சொல்லியிருக்கிறார்.Vijayமுன்னதாக, உயிரிழந்த அ... மேலும் பார்க்க

விழுப்புரத்தின் `திமுக முகம்' - பதவியில் இல்லாவிட்டாலும் கோலோச்சும் பொன்முடி!

அமைச்சர் உள்ளிட்ட பதவிகளில் இருந்து பொன்முடி நீக்கப்பட்டாலும், தற்போது வரை விழுப்புரத்தின் திமுக முகமாக பொன்முடியே அறியப்படுகிறார். கட்சிப் பதவியில் இல்லாவிட்டாலும் பொன்முடி தலைமையில், `ஓரணியில் தமிழ்... மேலும் பார்க்க

RBI: இந்திய ரூபாய் நோட்டுகள் எதனால் செய்யப்படுகின்றன தெரியுமா?!

சமீபத்திய ஆண்டுகளில் நாடு முழுவதும் டிஜிட்டல் பரிவர்த்தனை அதிகரித்து வருகிறது. இருப்பினும் ஒவ்வொரு நாளும் ரூபாய் நோட்டுகளை கையாண்டு தான் வருகிறோம். ரூ10, 100 ரூபாய் 500 ரூபாய் தற்போது நிறுத்தப்பட்டுள்... மேலும் பார்க்க

டெல்லி: 10 ஆண்டுகள் பழைமையான டீசல் வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்ப தடை - என்ன காரணம்?

டெல்லி அரசு சமீபத்தில் பழைய வாகனங்கள் மீது எடுத்த நடவடிக்கை, தலைநகர் முழுவதும் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. மாநில அரசின் புதிய கொள்கைபடி, 15 ஆண்டுகளுக்கும் மேலான பெட்ரோல் வாகனங்களும், 10 ஆண்டுகளுக்... மேலும் பார்க்க