செய்திகள் :

``கர்நாடகா காங்கிரஸில் அதிகார மாற்றமா?'' - தொடரும் கேள்விக்கு காங்கிரஸ் தலைமை பதில்!

post image

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் (ஏ.ஐ.சி.சி) பொதுச் செயலாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா கர்நாடக காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களை நேரில் சந்தித்து வருகிறார். கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் போதே, சித்தராமையாவுக்கும் டி.கே. சிவகுமாருக்கும் இடையே முதல்வர் பதவிக்கு கடும் போட்டி நிலவின. நீண்ட இழுப்பறிக்கு பிறகு மூத்த தலைவர்களின் பேச்சுவார்த்தை உறுதியைத் தொடர்ந்து டி.கே. சிவகுமார் துணை முதல்வர் பதவியை ஏற்றார்.

இந்த நிலையில், முதல்வராக சித்தராமையா பதவியேற்று இரண்டரை ஆண்டுகள் நிறைவடையவுள்ள நிலையில், முதல்வர் மாற்றம் குறித்து பேச்சு அக்கட்சி நிர்வாகிகளுக்குள் எழுந்துள்ளது. இந்த நிலையில், ராமநகர காங்கிரஸ் எம்.எல்.ஏ இக்பால் உசேன், ரன்தீப் சிங் சுர்ஜேவாலாவை சந்திப்பதற்கு முன்னதாக நேற்று செய்தியாளர்களை சந்தித்தார்.

சித்தராமையா - டி.கே. சிவகுமார்

அப்போது, ``கர்நாடக முதல்வரை மாற்றவில்லை என்றால், 2028 சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெறாது. 137 எம்எல்ஏக்களில் நூற்றுக்கும் அதிகமானோர் சிவக்குமாருக்கே ஆதரவாக இருக்கின்றனர். அவரை முதல்வராக்க வேண்டும். சிவகுமாரின் தலைமையே கட்சியின் 2023 வெற்றிக்கு முக்கியமானது. மேக்கேதாட்டு பாதயாத்திரையை ஏற்பாடு செய்வதில் அவரது பங்கு மிகவும் முக்கியமானது. இறுதி முடிவு கட்சி உயர் மட்ட நிர்வாகிகளிடமே இருக்கிறது என்றாலும், நான் தலைமையை மதிக்கிறேன், ஆனால் இங்கிருக்கும் உண்மை நிலையையும் சொல்கிறேன்” என்றார்.

காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களின் கருத்து அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சித்தராமையாவும், சிவக்குமாரும் நேற்று ஒன்றாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய சித்தராமையா, ``எங்களைப் பற்றி யார் என்ன சொன்னாலும் கவலையில்லை, நாங்கள் (சிவகுமாரும் - சித்தராமையாவும்) ஒற்றுமையாகவே இருக்கிறோம்" எனத் தெரிவித்தார்.

அதைத் தொடர்ந்து, எம்.எல்.ஏ.க்களுடனான தனது சந்திப்புகளுக்கும் தலைமை மாற்றத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதை சுர்ஜேவாலா திட்டவட்டமாக மறுத்துள்ளார். காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் சிவகுமாரின் அருகில் நின்று செய்தியாளர்களை சந்தித்த அவர், ``சமீபத்திய சட்டமன்ற மற்றும் மக்களவைத் தேர்தல்களில் போட்டியிட்ட வேட்பாளர்கள் உள்பட எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளின் செயல்திறன் மதிப்பாய்வின் ஒரு பகுதியாக இந்த சந்திப்புகள் இருந்தது.

ரன்தீப் சுர்ஜேவாலா

அவர்கள் தங்கள் தொகுதிகளில் என்ன வேலை செய்தார்கள் என்பதைப் புரிந்துகொள்ள முயற்சிக்கிறோம். அவர்களின் செயல்திறனை மதிப்பாய்வு செய்வது முக்கியம். பெண்களுக்கான இலவச பேருந்து பயணம் போன்ற கட்சியின் முதன்மையான உத்தரவாதத் திட்டங்களின் செயல்பாட்டுத் திட்டத்தை கண்காணிப்பதும் இந்த மதிப்பீட்டில் அடங்கும்.

சட்டமன்ற உறுப்பினர்கள் அவற்றை செயல்படுத்துவது குறித்த "அறிக்கை அட்டைகளை" சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். உள் பிரச்னைகளை கட்சி மன்றங்களுக்குள் வைத்திருக்க வேண்டும். அவர்களுக்குள் ஏதேனும் பிரச்னை இருந்தால், அதைக் கட்சித் தலைமையிடம் தெரிவியுங்கள்." என்றார்.

பீகார்: ``வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம்'' - தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பு சர்ச்சையானது ஏன்?

பீகார் மாநிலத்தின் சட்டமன்றத் தேர்தல் 2025 அக்டோபர்–நவம்பர் மாதங்களில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், பீகாரில் வாக்காளர் பட்டியல்களில் சிறப்பு தீவிர திருத்தம் (special intensive r... மேலும் பார்க்க

Trump: `எலான் மஸ்க்கை அவரது நாட்டிற்கு அனுப்ப போகிறீர்களா?' -டிரம்ப் சொன்ன பதில்

ஒன் பிக் அண்ட் பியூட்டிஃபுல் பில்லினால் மீண்டும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் உலகின் நம்பர் ஒன் பணக்காரரான எலான் மஸ்க் இடையே சலசலப்பு எழுந்துள்ளது. நீண்ட நாள்களுக்கு பிறகு, இந்த பில்லிற்கு எதிராக, ... மேலும் பார்க்க

``நம்முடைய காவல்துறை போன்று சிறப்பாக செயல்படக்கூடிய காவல்துறை எங்கும் இல்லை!'' - அமைச்சர் ரகுபதி

ஓரணியில் தமிழ்நாடு இயக்கம்புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ரகுபதி,"ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தின் கீழ் தி.மு.க-வைச் சேர்ந்த ஒவ்வொரு அணியினரும் வீடு வீடாக சென்று, 'எதற்காக நாம் ஒன்றிணை... மேலும் பார்க்க

Doctor Vikatan: மருத்துவரைப் பார்க்கச் செல்லும்போதுஎகிறும் BP; கட்டுப்படுத்த முடியுமா?

Doctor Vikatan: என்அம்மாவுக்கு 60 வயதாகிறது. எப்போது எந்தப் பிரச்னைக்காகமருத்துவரைப் பார்க்கப்போனாலும் அவருக்கு BP அளவு தாறுமாறாக அதிகரிக்கிறது. மருத்துவர் BP பார்த்துவிட்டு, குறைத்துவிட்டு வரும்படி த... மேலும் பார்க்க

``பயிற்சி, ஊக்கம் கொடுத்தால் ஆப்பிள் சாகுபடியில் வருவாய் ஈட்ட முடியும்'' -கொடைக்கானல் விவசாயி சாதனை

கொடைக்கானல் கவுஞ்சி பகுதியைச் சேர்ந்த மூர்த்தி தன்னுடைய நிலத்தில் ஆப்பிள், குங்குமபூ போன்றவற்றை நட்டு வைத்து 3 வருட காலம் பராமரித்து தற்போது ஆப்பிள் சாகுபடி செய்வதற்கு தயாராக உள்ளார். ஜம்மு காஷ்மீரின்... மேலும் பார்க்க

MP: `90 டிகிரியில் திரும்பும் அபாயகரமான மேம்பாலம்' -கடும் எதிர்ப்பால் 7 பொறியாளர்கள் பணியிடை நீக்கம்

போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த மேம்பாலங்கள் கட்டுவது வழக்கம். ஆனால் அந்த மேம்பாலங்கள் சில நேரங்களில் போக்குவரத்துக்கு பயன்படுத்த முடியாமல் கட்டிவிடுவார்கள். அது போன்ற ஒரு சம்பவம் மத்திய பிரதேசத்தி... மேலும் பார்க்க