கானா அதிபருடன் பிரதமர் மோடி சந்திப்பு!
ஆப்பிரிக்கா ஒன்றியத்தைச் சேர்ந்த கானா நாட்டின் அதிபர் ஜான் திராமணி மஹாமாவை பிரதமர் நரேந்திர மோடி இன்று சந்தித்துப் பேசினார்.
பிரதமர் நரேந்திர மோடி 8 நாள்கள் சுற்றுப் பயணமாக 5 நாடுகளுக்குச் செல்லவுள்ளார். முதல் நாளான இன்று கானாவுக்குச் சென்றுள்ளார். தலைநகர் அக்ராவுக்குச் சென்ற பிரதமர் மோடிக்கு, விமான நிலையத்தில் கானாவின் பாரம்பரிய முறைப்படி 21 துப்பாக்கிகள் ஏந்தி வரவேற்பு அளிக்கப்பட்டது.
கானா அதிபர் ஜான் திராமணி மஹாமா பிரதமர் நரேந்திர மோடியை கட்டியணைத்து வரவேற்றார். பிரதமராக பதவியேற்ற பிறகு முதல்முறையாக கானாவுக்குச் செல்லும் மோடி, 30 ஆண்டுகளுக்குப் பிறகு கானாவுக்குச் செல்லும் பிரதமர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
கானாவுக்குச் செல்வதற்கு முன்பு வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள பதிவில்,
''ஆப்பிரிக்க ஒன்றியத்தின் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும் கானா நாடாளுமன்றத்தில் உரையாற்றுவதை பெருமையாகக் கருதுகிறேன். இரு நாடுகளுக்கு இடையிலான வரலாற்று ஒப்பந்தங்களை ஆழமாக்குவதையும், கூட்டு ஒத்துழைப்பில் புதிய வாய்ப்புகளை ஏற்படுத்துவதையும் எதிர்நோக்கியுள்ளேன்'' எனப் பதிவிடப்பட்டுள்ளது.
ஜூலை 2-3 ஆகிய தேதிகளில் கானாவில் இருக்கும் பிரதமர், 3 - 4 தேதிகளில் டிரினிடாட் மற்றும் டோபாகோ நாடுகளுக்குச் செல்லவுள்ளார்.
இதையும் படிக்க | சீன உரங்களை சார்ந்திருப்பது இந்திய விவசாயத்திற்கு அச்சுறுத்தல்!
Prime Minister Narendra Modi meets with Ghanaian President John Mahama