செய்திகள் :

உயிருக்கு அச்சுறுத்தல்: அஜித்குமார் வழக்கின் முக்கிய சாட்சி புகார்!

post image

திருப்புவனத்தில் காவலாளி அஜித்குமாரை போலீசார் தாக்கும் விடியோவை எடுத்த சக்தீஸ்வரன் என்பவர் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் பாதுகாப்பு கோரி தமிழக டிஜிபியிடம் கடிதம் அளித்துள்ளார்.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் மடப்புரம் கோயிலுக்கு வந்த பக்தர் ஒருவரின் நகை காணாமல் போன விவகாரத்தில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட கோயில் காவலாளி அஜித்குமார், காவல் துறையினர் தாக்கியதில் பலியாகினார்.

இந்த விவகாரத்தில் 5 காவலர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அஜித்குமாரை காவலர்கள் தாக்கும் விடியோவை கோயில் ஊழியர் சக்தீஸ்வரன் எடுத்து வெளியிட்டுள்ளார். இந்த வழக்கில், முக்கிய சாட்சியாக அந்த விடியோ அமைந்துள்ளது.

நீதிமன்றத்தில் புதன்கிழமை நேரில் ஆஜரான சக்தீஸ்வரன் காவலர்கள் அஜித்குமார் தாக்கியது குறித்து வாக்குமூலம் அளித்துள்ளார். இந்த வழக்கின் பிரதான சாட்சியாக சக்தீஸ்வரன் உள்ளார்.

இந்த நிலையில், தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் பாதுகாப்பு கோரியும் டிஜிபிக்கு சக்தீஸ்வரன் கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில், “அஜித்குமார் கொலை வழக்கில் சாட்சி கூறியதை தொடர்ந்து, போலீஸுடன் தொடர்பில் உள்ள ரெளடிகள் தனக்கு மிரட்டல் விடுத்துள்ளனர். எனது உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது. ஆகையால், எனக்கும் எனது குடும்பத்தினருக்கும் 24 மணிநேரமும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும். உள்ளூர் அல்லாமல் வெளிமாவட்ட போலீசார் மூலம் பாதுகாப்பு தேவை” எனக் குறிப்பிட்டுள்ளார்.

தமிழகத்தையே உலுக்கியுள்ள வழக்கின் முக்கிய சாட்சியான சக்தீஸ்வரனுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிக்க : காஸா போா் நிறுத்த நிபந்தனைகளை ஏற்றது இஸ்ரேல்!

Saktheeswaran, who filmed the police assaulting security guard Ajith Kumar in Thiruppuvanam, has written a letter to the Tamil Nadu DGP seeking protection as his life is under threat.

அஜித்குமார் வழக்கு: மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை!

திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் மரண வழக்கை மாநில மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணையை மேற்கொண்டுள்ளது.சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் மடப்புரம் கோயிலுக்கு வந்த பக்தர் ஒருவரின் நகை காணாமல் போன... மேலும் பார்க்க

நீலகிரி, கோவையில் ஜூலை 5 வரை கனமழை எச்சரிக்கை!

தமிழகத்தில் நீலகிரி கோவையில் ஜூலை 5 வரை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக,ஜூலை 3 முதல் 5 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை ... மேலும் பார்க்க

பரமசிவன் பாத்திமா படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி!

பரமசிவன் பாத்திமா படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.நடிகர் விமல் நடிப்பில் லட்சுமி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிப்பில் வெளியான திரைப்படம் பரமசிவன் பாத்திமா. இப்படம் த... மேலும் பார்க்க

ஓரணியில் தமிழ்நாடு: வீடுவீடாகச் சென்று மக்களைச் சந்திக்கும் முதல்வர்!

சென்னை: சென்னை ஆழ்வார்பேட்டையில் வீடுவீடாகச் சென்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மக்களைச் சந்தித்து வருகிறார்.திராவிட முன்னேற்றக் கழக அரசின் திட்டங்களையும் சாதனைகளையும் மக்களிடம் எடுத்துரைத்து, 2026 ... மேலும் பார்க்க

இபிஎஸ் சுற்றுப்பயணத்தில் பங்கேற்க நயினார் நாகேந்திரனுக்கு அழைப்பு!

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மேற்கொள்ள இருக்கும் சுற்றுப்பயணத்தின் தொடக்கவிழாவில் கலந்துகொள்ள பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.தமிழக சட்டப்பேரவைத் தே... மேலும் பார்க்க

அடுத்த 2 மணிநேரத்துக்கு சென்னை, 7 மாவட்டங்களில் மழை!

தமிழகத்தில் வியாழக்கிழமை காலை 10 மணிவரை 8 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.இது குறித்து வானிலை ஆய்வு மையம் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவி... மேலும் பார்க்க