செய்திகள் :

8 நாள்களில் 5 நாடுகளுக்குச் சுற்றுப்பயணம்: புறப்பட்டார் பிரதமர் மோடி!

post image

பிரதமர் நரேந்திர மோடி, 8 நாள்கள் சுற்றுப்பயணமாக கானா, ட்ரினிடாட் மற்றும் டொபாகோ, ஆர்ஜென்டினா, பிரேசில், நமீபியா ஆகிய நாடுகளுக்கு புறப்பட்டார். மேலும், பிரேசிலில் நடைபெறவுள்ள பிரிக்ஸ் மாநாட்டிலும் பங்கேற்கவுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடியில் கடந்த பத்தாண்டு ஆட்சிகாலத்தில் மிகக் குறுகிய நாள்களில் அவர் மேற்கொள்வுள்ள சுற்றுப்பயணமாக இந்தப் பயணம் பார்க்கப்படுகிறது. இந்த 8 நாள்கள் கொண்ட சுற்றுப்பயணம் ஆப்பிரிக்க நாடான கானாவில் இன்று (ஜூலை 2) தொடங்குகிறது. இங்கு நடைபெறும் நிகழ்ச்சிகளில் பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள்கள் கலந்துகொள்ளவுள்ளார்.

பிரதமராகப் பதவியேற்றப் பிறகு மோடியின் முதல் பயணம் இதுவாகும். கிட்டத்தட்ட ஆண்டுகளாக எந்த இந்தியப் பிரதமரும் கானாவுக்குச் சென்றதில்லை.

கானா தேர்தலில் வெற்றி பெற்று, பதவியேற்ற கானா அதிபர் ஜான் டிராமணி மஹாமாவை மோடி சந்திக்கவுள்ளார். பின்னர் ஜூலை 3 ஆம் தேதி டிரினிடாட் மற்றும் டொபாகோவுக்குச் செல்வார். டிரினிடாட் மற்றும் டொபாகோ குடியரசின் பிரதமர் கம்லா பெர்சாத்-பிஸ்ஸேசரின் அழைப்பின் பேரில் அவர் இந்த பயணத்தை மேற்கொள்கிறார்.

ஜூலை 4 ஆம் தேதி பிரதமர் மோடி ஆர்ஜென்டீனாவுக்குச் செல்கிறார். அதிபர் ஜேவியர் மிலேயின் அழைப்பின் பேரில் மோடி இந்தப் பயணத்தை மேற்கொள்கிறார். 1968 ஆம் ஆண்டுக்குப் பிறகு ஒரு இந்தியப் பிரதமரின் முதல்பயணம் இதுவாகும்.

உணவு, பாதுகாப்பு, டிஜிட்டல் தொழில்நுட்பம், மருத்துவம், சுரங்கம், பசுமை மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆகிய துறைகளில் மோடியும் மிலேயும் விரிவான பேச்சுவார்த்தைகளை நடத்துவார்கள்.

ஜூலை 6 ஆம் தேதி பிரேசிலுக்குச் செல்கிறார் பிரதமர் மோடி. ரியோ டி ஜெனிரோவில் நடைபெறும் பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் மோடி கலந்து கொள்ளவுள்ளார். இது மோடியின் நான்காவது பிரேசில் பயணமாகும்.

ஜூலை 9 ஆம் தேதி நமீபியாவுக்கு விமானம் மூலம் பயணம் மேற்கொள்ளும் பிரதமர் நரேந்திர மோடி, நமீபிய அதிபர் டாக்டர் நெடும்போ நந்தி-நதைத்வாவைச் சந்திக்கிறார்.

30 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு இந்தியப் பிரதமர் நமீபியாவுக்குச் செல்வது இதுவே முதல் முறையாகும். மேலும், ஒரு இந்தியப் பிரதமர் அந்த நாட்டிற்கு வருகை தருவது 3-வது முறையாகும்.

Prime Minister Narendra Modi has left today for his visit to Ghana, Trinidad and Tobago, Argentina, Brazil, and Namibia. Mr Modi will arrive in Ghana today on a two-day visit.

இதையும் படிக்க... இந்தியா, சீனாவுக்கு 500% வரி விதிக்கும் புதிய மசோதா! - அமெரிக்கா முன்மொழிவு

இந்தியா மீது 500% வரி: அமெரிக்கா திட்டம்

ரஷியாவுடன் வா்த்தகத்தில் ஈடுபடும் இந்தியா, சீனா போன்ற நாடுகள் மீது 500 சதவீத வரி விதிக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. இது தொடா்பான மசோதாவை, அமெரிக்க நாடாளுமன்ற மேலவையில் (செனட்) அறிமுகப்படுத்த அதிபா் ட... மேலும் பார்க்க

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: ஷேக் ஹசீனாவுக்கு 6 மாத சிறை

வங்கதேச முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனாவுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அந்நாட்டின் சா்வதேச குற்றவியல் தீா்ப்பாயம் அவருக்கு ஆறு மாத சிறைத் தண்டனை விதித்தது. நீதிபதி கோலம் மோா்துஸா மொசும்தாா் தலை... மேலும் பார்க்க

‘அடுத்த தலாய் லாமா தோ்ந்தெடுக்கப்படுவாா்’ -தலாய் லாமா உறுதி

‘தலாய் லாமா மரபு என்னுடைய மறைவுக்குப் பிறகும் தொடரும். அடுத்த தலாய் லாமாவை காடேன் போட்ராங் அறக்கட்டளை தோ்வு செய்யும்’ என்று 14-ஆவது தலாய் லாமா புதன்கிழமை கூறினாா். திபெத்திய பௌத்த மதத்தின் தலைவராகக்... மேலும் பார்க்க

உக்ரைனுக்கு சில ஆயுதங்களின் விநியோகம் நிறுத்தம் - அமெரிக்கா

உக்ரைனுக்கு சில ஆயுதங்கள் விநியோகிப்பதை நிறுத்திவைப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. முந்தைய ஜோ பைடன் ஆட்சிக்காலத்தில் உக்ரைனுக்கு இந்த ஆயுதங்களை அளிப்பதாக உறுதியளிக்கப்பட்டிருந்தது. இருந்தாலும், அமெரி... மேலும் பார்க்க

காஸா போா் நிறுத்த நிபந்தனைகளை ஏற்றது இஸ்ரேல்!

காஸா போா் நிறுத்தத்துக்குத் தேவையான நிபந்தனைகளை இஸ்ரேல் ஏற்றுக்கொண்டுள்ளதாக அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளாா். இது குறித்து ட்ரூத் சோஷியல் ஊடகத்தில் அவா் வெளியிட்ட பதிவில் தெரிவிக்கப்பட... மேலும் பார்க்க

எகிப்து: கப்பல் கவிழ்ந்து 4 போ் உயிரிழப்பு

எகிப்தின் சூயஸ் வளைகுடாவில் எண்ணெய் துரப்பண கப்பல் கவிழ்ந்ததில் 4 போ் உயிரிழந்ததனா்; 4 போ் மாயமாகினா். ராஸ் கரேப் நகருக்கு அருகே கவிழ்ந்த இந்தக் கப்பலில் 30 தொழிலாளா்கள் இருந்ததாகவும், 22 போ் மீட்க... மேலும் பார்க்க