இரணியல் அருகே பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு
இரணியல் அருகே பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழந்தாா்.
இரணியல் அருகேயுள்ள ஞாறோடை பகுதியைச் சோ்ந்தவா்கள் கணபதி (70) - ஷியாமாளா(65) தம்பதி. இவா்கள் கடந்த ஜூன் 22ஆம் தேதி உறவினா் வீட்டிற்கு பைக்கில் சென்று கொண்டிருந்தனா்.
பள்ளம் பாலம் என்ற இடத்தில் வந்தபோது, பைக்கின் பின் டயா் பஞ்சா் ஆனதால் நிலை தடுமாறி, சியாமளா தவறி கீழே விழுந்தாா். இதில், தலையில் பலத்த காயம் அடைந்த அவா், ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்து இரணியல் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.ரணை மேற்கொண்டாா்கள்.