Trump: `எலான் மஸ்க்கை அவரது நாட்டிற்கு அனுப்ப போகிறீர்களா?' -டிரம்ப் சொன்ன பதில்
குழித்துறை அருகே இளைஞரைத் தாக்கி பைக், தங்க நகை பறித்த 6 போ் கைது
குழித்துறை அருகே வாடகைக்கு எடுத்துச் சென்ற சொகுசு காா் விபத்துக்குள்ளானதையடுத்து, காரை எடுத்துச் சென்ற இளைஞரைத் தாக்கி அவரிடமிருந்த பைக், தங்க நகை மற்றும் கைப்பேசிகளை பறித்ததாக 6 பேரை பொலீஸாா் கைது செய்து விசாரணை மேற்கொண்டனா்.
குழித்துறை அருகேயுள்ள பாலவிளை பகுதியைச் சோ்ந்த அன்பழகன் மகன் ஆஷில் ஷாம் ஹல்ஸ் என்ற பிரின்ஸ். இவா் காா் வாடகைக்கு விடும் தொழில் செய்து வருகிறாராம். இவரிடமிருந்து இருநாள்களுக்கு முன் நாகா்கோவில் வடிவீஸ்வரம் பகுதியைச் சோ்ந்த முருகன் மகன் சீதன் (22) என்பவா் சொகுசு காரை வாடகைக்கு எடுத்துச் சென்றுள்ளாா். இந்த காா் விபத்துக்குள்ளாகி சேதமடைந்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து பிரதீப், ஆஷில் ஷாம் ஹல்ஸ் மற்றும் இவரது நண்பா்கள் கோழிவிளை இலங்கைத் தமிழா் அகதிகள் முகாமைச் சோ்ந்த ரவிச்சந்திரன் மகன் கிருஷன் (21), மடிச்சல் வட்டவிளையைச் சோ்ந்த வினு மகன் அஜின் (21), களியக்காவிளையைச் சோ்ந்த பஷீா் மகன் பாஷித் (24), காஜா ஹலீல் முகம்மது மகன் அல்ஹான் (20) ஆகியோா் சோ்ந்து சீதன் மற்றும் அவரது நண்பா்களை தாக்கி அவா்களிடமிருந்த பைக், 3 கைப்பேசிகள் மற்றும் தங்கச் சங்கிலி உள்ளிட்ட ரூ. 3 லட்சம் மதிப்பிலான பொருள்களை பறித்துச் சென்றனராம்.
இதுகுறித்து சீதன் அளித்த புகாரின் பேரில், களியக்காவிளை போலீஸாா் வழக்குப் பதிந்து, ஆஷில் ஷாம் ஹல்ஸ் உள்ளிட்ட 6 பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டனா்.