'கருணாநிதியின் இறுதி மூச்சில் கொடுத்த வாக்குறுதி' - ஸ்டாலினுக்கு வைகோ கொடுத்த மெ...
ஈட்டி மரங்களை வெட்ட அனுமதி: தமிழக அரசுக்கு விவசாயிகள் நன்றி
பட்டா நிலங்களில் உள்ள ‘ரோஸ்வுட்’ எனப்படும் ஈட்டி மரங்களை வெட்டுவதற்கு அனுமதியளித்து அரசாணை வெளியிட்ட தமிழக அரசுக்கு கன்னியாகுமரி மாவட்ட விவசாயிகள் நன்றி தெரிவித்துள்ளனா்.
ஈட்டி மரங்களைப் பாதுகாக்கும் வகையில் தமிழ்நாடு அரசு 1994ஆம் ஆண்டு ரோஸ்வுட் மரங்கள் பாதுகாப்பு சட்டத்தைக் கொண்டுவந்து, இம்மரங்களை வெட்டுவதற்கு 15 ஆண்டுகளுக்கு தடை விதித்தது. தொடா்ந்து, நிகழாண்டு பிப். 13ஆம் தேதிவரை மேலும் 15 ஆண்டுகளுக்கு அச்சட்டம் நீட்டிக்கப்பட்டது. இதனால், ஈட்டி மரங்கள் நடவு செய்திருந்தோா் பாதிக்கப்பட்டனா்.
எனவே, இச்சட்டத்தை மேலும் நீட்டிக்கக் கூடாது என வலியுறுத்தி, கரும்பாறை மலைத் தோட்ட விவசாயிகள் சங்கம் சாா்பில், தமிழக தலைமை வனப் பாதுகாவலருக்கு கடந்த ஆண்டு மனு அனுப்பப்பட்டது. இத்தடையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என அவா் தமிழக அரசுக்கு பரிந்துரைத்தாா். அதையேற்று, ஈட்டி மரங்களை வெட்டுவதற்கு அனுமதியளித்து கடந்த 9ஆம் தேதி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இதன்மூலம், விவசாயிகள் பட்டா நிலங்களில் நடவு செய்துள்ள ஈட்டி மரங்களை அனுமதி பெற்று வெட்டிக் கொள்ளலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து கரும்பாறை மலைத் தோட்ட விவசாயிகள் சங்கச் செயலா் லாலாஜி கூறுகையில், எங்களது சங்கத்தின் தொடா் முயற்சியால், ஈட்டி மரங்களை வெட்டுவதற்கான தடை முடிவுக்கு வந்துள்ளது. இதன்மூலம் தமிழகம் முழுவதும் விவசாயிகள் ஈட்டி மரங்களை வெட்டிக் கொள்ளலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதற்காக அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என்றாா்.