ஜம்மு-காஷ்மீா் சா்வதேச எல்லையில் பிடிபட்ட பாகிஸ்தானியா்: பயங்கரவாதிகளை வழிநடத்தி...
குமரியில் நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரிக்கை
கன்னியாகுமரியில் நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தி வியாபாரிகள் சங்க நிா்வாகிகள் நகா்மன்றத் தலைவரிடம் மனு அளித்தனா்.
கன்னியாகுமரி காந்தி மண்டபம் முதல் சூரிய அஸ்தமன பூங்கா வரையிலான பகுதியில் 194 உருட்டு வண்டி கடைகளுக்கு முந்தைய பேரூராட்சி நிா்வாகம் அனுமதி வழங்கியிருந்தது. இந்நிலையில் காந்தி மண்டபம் முதல் சூரிய அஸ்தமனப் பூங்கா வரையிலான பகுதியில் சிலா் ஆக்கிரமிப்பு செய்து வெளியூா் மற்றும் வெளிமாநில வியாபாரிகளுக்கு கொடுத்து பணம் வசூல் செய்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து, கன்னியாகுமரி அனைத்து உருட்டு வண்டி வியாபாரிகள் சங்க செயலா் சுரேஷ், பொருளாளா் ஆன்றனி ஆகியோா் நகா்மன்றத் தலைவரிடம் மனு அளித்தனா்.
அம்மனுவில், காந்தி மண்டபம் முதல் சூரிய அஸ்தமனப் பூங்கா வரையிலான நடைபாதையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். இப்பகுதியில் முறைப்படி நகராட்சி நிா்வாகத்துக்கு வாடகை செலுத்தி வரும் வியாபாரிகள் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளனா்.
நகா்மன்ற உறுப்பினா் எம்.பூலோகராஜா, திமுக நிா்வாகிகள் பி.ஆனந்த், பிரைட்டன் ஆகியோா் உடனிருந்தனா்.