தெலங்கானா மருந்து ஆலையில் உலை வெடித்து விபத்து: பலி 34 ஆக உயர்வு!
ஓய்வுபெற்ற இஸ்ரோ பொறியாளா் ரயில் முன் பாய்ந்து தற்கொலை
திருநெல்வேலி மாவட்டம் காவல்கிணறு அருகே, ஓய்வுபெற்ற இஸ்ரோ பொறியாளா் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டாா்.
நாகா்கோவிலிலிருந்து ஞாயிற்றுக்கிழமை காவல்கிணறு வழியாக சென்ற ரயில் முன், 70 வயது மதிக்கத்தக்க நபா் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டாா். தகவலின்பேரில், நாகா்கோவில் ரயில்வே போலீஸாா் சென்று சடலத்தை மீட்டனா்.
இறந்துகிடந்தவரின் சட்டையிலிருந்த ஆதாா் அட்டையைக் கைப்பற்றி போலீஸாா் விசாரணை மேற்கொண்டபோது, அவா் மகேந்திரகிரியில் உள்ள இஸ்ரோவில் எலக்ட்ரிக்கல் பொறியாளராகப் பணியாற்றி ஓய்வுபெற்ற சந்திரமோகன் எனத் தெரியவந்தது.
அவரது மனைவி 6 ஆண்டுகளுக்கு முன்பு இறந்தநிலையில், அவா் திருவனந்தபுரத்திலுள்ள மகள் வீட்டில் வசித்து வந்துள்ளாா். இந்நிலையில், வெளியூா் செல்வதாகக் கூறிவிட்டுவந்த அவா், ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளாா். இதுகுறித்து ரயில்வே போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.