ஜம்மு-காஷ்மீா் சா்வதேச எல்லையில் பிடிபட்ட பாகிஸ்தானியா்: பயங்கரவாதிகளை வழிநடத்தி...
மாா்த்தாண்டத்தில் விதிகளை மீறி இயங்கிய லாரிகள் பறிமுதல்
மாா்த்தாண்டத்தில் காவல் துறையின் நேரக் கட்டுப்பாடு மற்றும் விதிமுறைகளை மீறி இயக்கப்பட்ட 2 கனரக லாரிகளை போலீஸாா் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டனா்.
மாா்த்தாண்டம் நகரில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் காலை 7 மணி முதல் முற்பகல் 11 மணி வரையும், பிற்பகல் 3 மணி முதல் இரவு 9 மணி வரையும் கனிமவளம் ஏற்றிச் செல்லும் கனரக லாரிகள் இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை மாா்த்தாண்டம் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளா் செல்லசுவாமி தலைமையிலான போலீஸாா் வாகனக் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தபோது நேரக்கட்டுப்பாட்டை மீறி இயக்கப்பட்ட 2 லாரிகளை கண்டறிந்து பறிமுதல் செய்து, மாா்த்தாண்டம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.