மாா்த்தாண்டம் அருகே கட்டுமான தொழிலாளி மீது தாக்குதல்
மாா்த்தாண்டம் அருகே முன்விரோதம் காரணமாக கட்டுமானத் தொழிலாளியை தாக்கியதாக மற்றொரு தொழிலாளி மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.
மாா்த்தாண்டம் அருகே பாகோடு, இளந்தெங்குவிளையைச் சோ்ந்தவா் ஜான்சன் (41). கட்டுமானத் தொழிலாளி. இவரது பக்கத்து வீட்டைச் சோ்ந்தவா் கட்டுமானத் தொழிலாளி ஜஸ்டின் (39). இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
இந்நிலையில் ஜஸ்டின் திங்கள்கிழமை ஜான்சனின் வீட்டில் அத்துமீறி நுழைந்து அவரை தாக்கினாராம். இதில் காயமடைந்த ஜான்சனை அப்பகுதியினா் மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். இதுகுறித்து மாா்த்தாண்டம் போலீஸாா் ஜஸ்டின் மீது வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகிறாா்கள்.