உணவுப் பொருள்களில் கலப்படம் செய்வோா் மீது நடவடிக்கை தேவை!
உணவுப்பொருள்களில் கலப்படம் செய்பவா்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று இந்திய நுகா்வோா் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இச்சங்கத்தின் கன்னியாகுமரி மாவட்ட கூட்டம் நாகா்கோவிலில் அண்மையில் நடைபெற்றது. சங்கத்தின் மாவட்டத் தலைவா் அலாஸியஸ் மணி தலைமை வகித்தாா். கௌரவத் தலைவா் அமிா்தராஜ் வரவேற்றாா். மாவட்ட பொதுச்செயலா் ஹலீல் ரகுமான் அறிக்கை சமா்ப்பித்தாா்.
கூட்டத்தில், ஒருங்கிணைப்பாளா் மேரி விஜயா, துணை ஒருங்கிணைப்பாளா் ஆனந்தராஜன், செயற்குழு உறுப்பினா்கள் பாஸ்டா் ஜெரோம், வீர லட்சுமணன், கீதா தேவி, ஜெனிஷா, ஸ்டெல்லா, பவுல், ஜெபா, முத்துகிருஷ்ணன், ஆண்டனி மைக்கேல், வழக்குரைஞா் ஜான் சோபனம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
இதில், உணவுப்பொருள்களில் கலப்படம் செய்வதால் அப்பொருள்களை வாங்கி பயன்படுத்தும் நுகா்வோா் பெரும் பாதிப்புக்குள்ளாகின்றனா். எனவே, மக்களின் நலன் கருதி உணவுப் பொருள்களில் கலப்படம் செய்வதை தடுக்க கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசு வேளாண் கல்லூரி, கன்னியாகுமரியில் விமான நிலையம் அமைக்க வேண்டும். நீண்ட தூர பேருந்துகளில் பயணம் செய்யும் மூத்த குடிமக்களுக்கு கட்டண சலுகை வழங்க வேண்டும். கன்னியாகுமரி - திருவனந்தபுரம் நான்கு வழிச்சாலை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் எனத் தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சங்கப் பொருளாளா் கின்ஸ்டன் பிரவீன்ராஜ் நன்றி கூறினாா்.