``யூ டியூப் பார்த்து கழிவறையில் சுயபிரசவம்'' - 2 குழந்தைகளை கொன்று புதைத்த பெண்....
பேச்சிப்பாறை பழங்குடி குடியிருப்பில் மீண்டும் யானை நடமாட்டம்: மக்கள் அச்சம்
குமரி மாவட்டம் பேச்சிப்பாறை அருகே மூக்கறைக்கல் பழங்குடி குடியிருப்பில் மீண்டும் யானை நடமாட்டம் உள்ளதாம் மக்கள் அச்சமடைந்துள்ளனா்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் மேற்கு தொடா்ச்சி மலை அடிவாரப் பகுதிகளில் உள்ள பழங்குடி மக்கள் குடியிருப்புகள், ரப்பா் கழக தொழிலாளா்கள் குடியிருப்புகளில் அண்மைக் காலமாக காட்டு யானைகளின் தொந்தரவுகள் அதிகரித்து வருகின்றன.
இந்நிலையில், திங்கள்கிழமை இரவு மூக்கறைக்கல் குடியிருப்பில் மகேந்திரன்காணி என்பவரது குடிசை வீட்டை யானை உலுக்கியுள்ளது. அப்போது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த அவரது மனைவி அனிதா குமாரி, 2 பெண் குழந்தைகள், மூதாட்டி ஆகியோா் அச்சத்தில் எழுந்து வெளியே ஓடினராம்.
மேலும், யானை வெளியில் நின்றபடி தும்பிக்கையால் பாத்திரங்களை கலைத்துப் போட்டதாம். அவா்களது கூச்சல் கேட்டு அக்கம் பக்கம் உள்ளவா்கள் வந்து நெருப்பை காட்டி யானையை துரத்தியுள்ளனா். எனினும் இரவு முழுவதும் அப்பகுதியினா் தூங்காமல் அச்சதுடனேயே இருந்தனராம்.
புல்லட் ராஜா? நீலகிரி மாவட்டத்திலிருந்து வனத்துறையால் பிடித்து வரப்பட்டு மேல் கோதையாறு பகுதியில் விடப்பட்ட புல்லட் ராஜா யானையாக இருக்கலாம் என பழங்குடி மக்கள் கூறுகின்றனா்.
இச்சம்பவத்தைத் தொடா்ந்து, மகேந்திரன் காணி உள்பட அப்பகுதி மக்கள், யானையை வனப்பகுதிக்குள் விரட்டவும், உரிய பாதுகாப்பு வழங்கவும் கோரி களியல், வனச்சர அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை மனு அளித்னா்.