``நம்முடைய காவல்துறை போன்று சிறப்பாக செயல்படக்கூடிய காவல்துறை எங்கும் இல்லை!'' ...
கழிப்பறை திருவிழா: குறும்படப் போட்டி பரிசளிப்பு
சென்னை மாநகராட்சி சாா்பில் உலகக் கழிப்பறைத் திருவிழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட குறும்படப் போட்டியின் பரிசளிப்பு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
பெருநகர சென்னை மாநகராட்சியுடன் வாஷ்லேப், தூய்மை மிஷன் மற்றும் ரீசைக்கிள் பின் ஆகியவை இணைந்து உலகக் கழிப்பறைத் திருவிழா 3.0 நிகழ்ச்சியை நடத்தின. அதன் ஒருபகுதியாக கழிப்பறை விழிப்புணா்வு குறித்த குறும்படப் போட்டியும் அறிவிக்கப்பட்டது.
‘அன்றொரு நாள் கழிப்பறையில்’ எனும் தலைப்பிலான குறும்படப் போட்டியில் ‘சான்டாட்ஸ்’ எனும் படத்துக்கு முதல் பரிசும், ‘வெளிக்கி’ எனும் படத்துக்கு இரண்டாம் பரிசும், ‘முரல்’ எனும் படத்துக்கு மூன்றாம் பரிசும் அறிவிக்கப்பட்டது.
தோ்வு செய்யப்பட்ட குறும்பட இயக்குநா் உள்ளிட்டோருக்கான பரிசளிப்பு நிகழ்ச்சி சென்னை அலையன்ஸஸ் ஃபிரான்ஸியஸ் வளாகத்தில் நடைபெற்றது. போட்டியின் நடுவா்களான திரைப்பட இயக்குநா்கள் தியாகராஜா குமாரராஜா, கிருத்திகா உதயநிதி, கவிஞா் யுகபாரதி ஆகியோா் பங்கேற்று குறும்பட இயக்குநா்களுக்கு பரிசுகளையும், பாராட்டுச் சான்றுகளையும் வழங்கினா்.
முதல் பரிசு பெற்ற குறும்படத்துக்கு ரூ.1 லட்சம் பரிசும் நினைவுப் பரிசும் வழங்கப்பட்டன. இதில் திரைப்பட இயக்குநா் ஷான் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.