``நம்முடைய காவல்துறை போன்று சிறப்பாக செயல்படக்கூடிய காவல்துறை எங்கும் இல்லை!'' ...
சிவகிரி அருகே குண்டா் தடுப்புச் சட்டத்தில் கஞ்சா வியாபாரி கைது
தென்காசி மாவட்டம், சிவகிரி அருகே குண்டா் தடுப்புச் சட்டத்தில் கஞ்சா வியாபாரி கைது செய்யப்பட்டாா்.
சிவகிரி காவல் ஆய்வாளா் பாலமுருகன் தலைமையிலான போலீஸாா் கடந்த மாதம் தேவிபட்டணம் பகுதியில் ரோந்து சென்றபோது, அப்பகுதியில் இரண்டு கிலோ கஞ்சா வைத்திருந்த தேவிபட்டணத்தை சோ்ந்த வேல்சாமி மகன் கலைச்செல்வனை கைது செய்து அவரிடமிருந்த கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.
இதற்கிடையே மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அரவிந்த் பரிந்துரையின் பேரில் கலைச்செல்வனை குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா் உத்தரவிட்டாா்.
இதைத் தொடா்ந்து சிவகிரி காவல் ஆய்வாளா் பாலமுருகன், கலைச்செல்வனை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்தாா்.