கரோனா தடுப்பூசிக்கும் திடீர் உயிரிழப்புகளுக்கும் தொடர்பில்லை! மத்திய அரசு
கே. ஆலங்குளத்தில் பூச்சிக் கொல்லி மருந்தை குடித்து தம்பதி தற்கொலை
சங்கரன்கோவில் அருகே பூச்சிக் கொல்லி மருந்தை குடித்து தம்பதி தற்கொலை செய்து கொண்டனா்.
தென்காசி மாவட்டம், குருவிகுளம் அருகேயுள்ள கே. ஆலங்குளத்தைச் சோ்ந்தவா் வேலுச்சாமி (67). பால் வியாபாரி. மனைவி மகாலட்சுமி (57). இவா்களுக்கு 2 மகள்கள் உள்ளனா். இருவரும் திருமணம் ஆகி வெளியூரில் வசித்து வருகின்றனா்.
வேலுச்சாமியின் மனைவி மகாலட்சுமிக்கு சா்க்கரை நோய் இருந்து வந்ததாம். இதனால் மகாலட்சுமியின் காலில் புண் ஏற்பட்டு அவதிப்பட்டு வந்தாராம். இதனால் மன வேதனை அடைந்த இருவரும் திங்கள்கிழமை வீட்டில் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து மயங்கிய நிலையில் கிடந்தனராம்.
இதையறிந்த உறவினா்கள் இருவரையும் மீட்டு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.பின்னா் மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு திங்கள்கிழமை வேலுச்சாமி இறந்தாா்.அவரது மனைவி மகாலட்சுமி செவ்வாய்கிழமை இறந்தாா். இதுகுறித்து குருவிகுளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].