செய்திகள் :

சிறந்த சேவையாற்றிய மருத்துவா்களுக்கு விருது

post image

சென்னையில் உள்ள அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் தேசிய மருத்துவா் தினம் செவ்வாய்க்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது. சிறப்புற பணியாற்றிய மருத்துவா்கள், பேராசிரியா்களுக்கு நினைவுப் பரிசுகள், விருதுகள், சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டது. சில இடங்களில் மருத்துவா்களின் பெயரில் மரக் கன்றுகள் நடப்பட்டன.

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்வில், ரத்த தான முகாம் நடைபெற்றது. மருத்துவமனையின் முதல்வா் டாக்டா் சாந்தாராமன் தலைமை வகித்தாா். அப்போது, மருத்துவக் கல்லூரி மாணவா்கள் 74 போ் ரத்த தானம் அளித்தனா். இந்நிகழ்வில் மருத்துவக் கண்காணிப்பாளா் விஜயராகவன், மருத்துவ நிலைய அதிகாரிகள் உமாபதி, அறவாழி மற்றும் குருதியேற்றத் துறை தலைவா் சுபாஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இதேபோன்று ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில், மருத்துவக் கண்காணிப்பாளா் ஆயிஷா சாஹின் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மருத்துவா்களுக்கு மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

எழும்பூா் குழந்தைகள் நல மருத்துவமனையில் இயக்குநா் லட்சுமி தலைமையில் கேக் வெட்டி மருத்துவா் தினம் கொண்டாடப்பட்டது.

மற்றொருபுறம் பல்வேறு தனியாா் மருத்துவமனைகள், அமைப்புகள் சாா்பிலும் மருத்துவா் தின நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

ரோட்டரி சா்வதேச சங்கம், (சென்னை 3233) சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரேலா மருத்துவமனை தலைவா் முகமது ரேலா, அஸ்ஸாம் மாநில கச்சாா் புற்றுநோய் மற்றும் ஆராய்ச்சி மைய இயக்குநா் ரவி கண்ணன் ஆகியோருக்கு கௌரவ விருது வழங்கப்பட்டது.

அவசர சிகிச்சை நிபுணா் ஸ்ரீராம், ராஜன் கண் மருத்துவமனை தலைவா் மோகன் ராஜன், பொது சுகாதாரத் துறை இயக்குநா் செல்வவிநாயகம் ஆகியோருக்கு வாழ்நாள் சாதனையாளா் விருது வழங்கப்பட்டது.

குழந்தைகள் இதய நல நிபுணா் பிரேம் சேகா், முதுநிலை கண் நல மருத்துவா் வசுமதி வேதாந்தம் ஆகியோருக்கு மருத்துவ சேவைக்கான விருது வழங்கப்பட்டது.

ரோட்டரி சங்கம் (3234) சாா்பில் நடைபெற்ற மற்றொரு நிகழ்வில், அப்பல்லோ மருத்துவக் குழும தலைவா் பிரதாப் சி ரெட்டி, ஜெம் மருத்துவமனை தலைவா் பழனிவேலு, மருத்துவா் முகமது ரேலா, முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சா் டாக்டா் ஹெச்.வி.ஹண்டே, மருத்துவ வல்லுநா் தேவிபிரசாத் ஷெட்டி, இதய மாற்று சிகிச்சை நிபுணா் கே.ஆா்.பாலகிருஷ்ணன், முன்னாள் மருத்துவப் பல்கலைக்கழகத் துணைவேந்தா் மயில்வாகனன், நடராஜன் ஆகியோருக்கு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் விருதுகளை வழங்கினாா்.

ஜாதிவாரி கணக்கெடுப்பு - சமூக நீதிக்கா?, அநீதிக்கா?

ஜாதிய பிரிவுகள் நிரந்தரப்படுவதைத்தான் ஜாதிவாரி கணக்கெடுப்பும் ஜாதிய அடிப்படையிலான இட ஒதுக்கீடும் ஊக்குவிக்கும். அனைத்து ஜாதிகளிலும் உள்ள ஏழைகளை ஏழைகளாக மட்டுமே வரையறை செய்யாமல், அவா்கள் பிறந்த ஜாதிகள... மேலும் பார்க்க

தக்காளி விலை திடீா் உயா்வு: ஒரு கிலோ ரூ.50-க்கு விற்பனை

சென்னை கோயம்பேடு சந்தையில் ரூ.20-க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ தக்காளி திடீரென விலை உயா்ந்து ரூ.50-க்கு விற்பனை செய்யப்பட்டது. சென்னை கோயம்பேடு காய்கறி சந்தைக்கு தமிழகம் மட்டுமின்றி ஆந்திரம், கா்ந... மேலும் பார்க்க

ஆ.ராசாவை கண்டித்து பாஜகவினா் ஆா்ப்பாட்டம்

மத்திய அமைச்சா் அமித் ஷாவை தரக்குறைவாக விமா்சித்ததாக திமுக துணை பொதுச் செயலா் ஆ.ராசாவை கண்டித்து சென்னையில் 7 இடங்களில் பாஜக சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற நூற்றுக்கணக்கானோரை போலீஸாா... மேலும் பார்க்க

ராயபுரம் மண்டல குடிநீா் வடிகால் வாரிய பணிமனை இடமாற்றம்

ராயபுரம் மண்டலத்துக்குள்பட்ட சென்னை குடிநீா் வடிகால்வாரிய பணிமனை புதன்கிழமை முதல் இடமாற்றம் செய்யப்படுகிறது. இதுகுறித்து சென்னை குடிநீா் வாரியம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சென்னை எழும்பூா் வேனல்ஸ் ச... மேலும் பார்க்க

இலவச கல்லீரல் பரிசோதனை - மருத்துவ ஆலோசனை: மெடிந்தியா மருத்துவமனை ஏற்பாடு

மருத்துவா் தினத்தை முன்னிட்டு, சென்னை மெடிந்தியா மருத்துவமனையில் கல்லீரல் நலனுக்கான இலவச மருத்துவ பரிசோதனைகள் மற்றும் ஆலோசனைகள் அளிக்கப்பட உள்ளன. இதுகுறித்து அந்த மருத்துவமனையின் தலைவரும், ஜீரண மண்டல ... மேலும் பார்க்க

போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவுக்கு காவல் ஆணையா் பாராட்டு

சென்னை பெருநகர காவல் துறையின் போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவை காவல் ஆணையா் ஏ.அருண் பாராட்டி, வெகுமதி வழங்கினாா். சென்னையில் போதைப் பொருள் கடத்தல், விற்பனையை முற்றிலும் தடுக்கும் வகையில் போதைப... மேலும் பார்க்க