`மாநில அரசு செய்த கொலை!' - DMK அரசை வெளுத்து வாங்கிய High Court | STALIN | Imper...
தவெகவின் யானை சின்னத்துக்கு தடையா? ஜூலை 3 தீர்ப்பு!
தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியில் உள்ள யானை சின்னத்துக்கு எதிராக பகுஜன் சமாஜ் கட்சி தொடர்ந்த வழக்கில் நாளை மறுநாள் (ஜூலை 3) சென்னை உரிமையியல் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கவுள்ளது.
பகுஜன் சமாஜ் கொடியில் உள்ள யானை சின்னத்தை தவெக கொடியில் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக பொதுச் செயலா் இளங்கோவன் சென்னை முதலாவது உரிமையியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தாா்.
இந்த வழக்கு தொடா்பாக தவெக பொதுச்செயலா் என்.ஆனந்த் தாக்கல் செய்த பதில் மனுவில், ”பல தகவல்களை மறைத்து தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனு விசாரணைக்கு உகந்தது அல்ல. பகுஜன் சமாஜ் கட்சி கொடிக்கும், தவெக கொடிக்கும் எந்த விதத் தொடா்பும் இல்லை. கட்சியின் கொள்கை, கோட்பாடு மற்றும் தமிழகத்தின் வளா்ச்சிக்கான எதிா்காலத் திட்டம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு தவெக கொடி வடிவமைக்கப்பட்டுள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சி கொடியில் உள்ள ஒற்றை யானைக்கும் தவெக கொடியில் உள்ள எக்காலம் ஊதும் இரட்டை யானைக்கும் பல மாறுபாடுகள் உள்ளன. தனித்துவத்துடன் தவெக கொடி உருவாக்கப்பட்டுள்ளது. வாக்காளா்களை குழப்பும் வகையில் உருவாக்கப்படவில்லை எனவே, அபராதத்துடன் இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்” என குறிப்பிடப்பட்டிருந்தது.
தொடர்ந்து வழக்கு விசாரணையின்போது, பகுஜன் சமாஜ் தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதத்தில், “எங்களுடைய கட்சி சின்னமான யானையை தவெக கொடியில் பயன்படுத்தி உள்ளதைப்போல் உதய சூரியன், அண்ணா, கை போன்ற சின்னங்களை திருத்தம் செய்து மற்ற கட்சி கொடிகளில் பயன்படுத்த திமுக அதிமுக போன்ற கட்சிகள் அனுமதிக்குமா? எங்களுடைய தேசிய சின்னமான யானையை வேறு எந்த கட்சிகளும் எந்த வடிவிலும் பயன்படுத்த முடியாது” எனத் தெரிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, தவெக பொதுச் செயலர் ஆனந்த் தரப்பு வாதம் இன்று முன்வைக்கப்பட்டது. அப்போது, ”தவெக கொடிக்கும் பகுஜன் சமாஜ் கொடிக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. தேர்தல் ஆணையம் ஏற்கெனவே எங்களுக்கு சாதகமாக உத்தரவு பிறப்பித்துள்ளது. விளம்பர நோக்கத்துக்காக மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது” என வாதிடப்பட்டது.
இந்த நிலையில், நாளை மறுநாள் வியாழக்கிழமை இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.
Chennai Civil Court will deliver its verdict the day after tomorrow (July 3) in the case filed by the Bahujan Samaj Party against the elephant symbol on the flag of the Tamizaga vettri kazhagam.