செய்திகள் :

அஜித்குமார் கொலை: நியாயப்படுத்த முடியாத தவறு - முதல்வர்

post image

திருப்புவனம் இளைஞருக்கு நடந்த கொடுமை யாருக்கும் நடக்கக் கூடாதது, யாராலும் நியாயப்படுத்த முடியாத தவறு என்று முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் மடப்புரம் கோயிலுக்கு வந்த பக்தர் ஒருவரின் நகை காணாமல் போன விவகாரத்தில் விசாரணைக்காக அழைத்துச் சென்ற, கோயில் காவலாளி அஜித் குமார் என்பவர் காவல் துறையினர் தாக்கப்பட்டு பலியானதாகக் கூறப்படுகிறது.

இந்த விவகாரம் காவல் துறையினரை மட்டுமின்றி, தமிழகம் முழுவதும் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

இதனிடையே, காவல் துறை விசாரணையில் உயிரிழந்த அஜித்குமாரின் வீட்டுக்கு கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரியகருப்பன் சென்று, குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்ததுடன், அரசின் நிவாரணங்கள் உடனடியாக கிடைக்க ஏற்பாடு செய்வதாக உறுதியளித்தார்.

அப்போது, முதல்வர் மு. க. ஸ்டாலின் தொலைபேசி வழியாக தொடர்புகொண்டு அஜித்குமார் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.

இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய சமூக வலைதளப் பதிவில், ”திருப்புவனம் இளைஞருக்கு நடந்த கொடுமை யாருக்கும் நடக்கக் கூடாதது, யாராலும் நியாயப்படுத்த முடியாத தவறு!

கடமை தவறிக் குற்றம் இழைத்தவர்களுக்கு நிச்சயம் இந்த அரசு தண்டனை பெற்றுத் தரும்! பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதலாக நிற்கும்!” என்று குறிப்பிட்டுள்ளார்.

Chief Minister Stalin said on his social media page that the atrocities committed against the Thiruppuvanam youth should not happen to anyone and is a mistake that cannot be justified.

இதையும் படிக்க: போலீஸ் விசாரணையில் மரணம்: அஜித்குமார் குடும்பத்தாருக்கு முதல்வர் ஸ்டாலின் ஆறுதல்!

காவல் விசாரணையில் மரணம்: “இது 25-வது முறை...” -எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

காவல் விசாரணையில் உயிரிழந்த இளைஞர் அஜித்குமாரின் குடும்பத்தினரிடம் இன்று(ஜூலை 1) தொலைபேசி வழியாக அறுதல் தெரிவித்துக் கொண்ட முதல்வர் மு. க. ஸ்டாலிலின் பேச்சில் கொஞ்சம்கூட குற்ற உணர்ச்சியே இல்லையே? என்ற... மேலும் பார்க்க

அடுத்த 3 மணிநேரத்துக்கு 9 மாவட்டங்களில் மழை!

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணிநேரத்துக்கு 9 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும் பார்க்க

திருப்புவனம் அஜித்குமார் மரண வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

திருப்புவனம் இளைஞர் அஜித்குமாரின் மரண வழக்கை சிபிஐக்கு மாற்றி முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். ஏற்கெனவே இவ்வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டிருந்த நிலையில் சிபிஐக்கு மாற்றி முதல்வர் ஸ்டாலின் உத்தரவ... மேலும் பார்க்க

நெகிழ்ச்சி சம்பவம்! 20 ஆண்டுகளுக்குப் பிறகு குடும்பத்துடன் இணைந்த நபர்!

பிகாரைச் சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட நபர் 20 ஆண்டுகளுக்குப் பிறகு தனது குடும்பத்துடன் இணைந்த நெகிழ்ச்சி சம்பவம் திருநெல்வேலியில் நடந்துள்ளது.சுமார் 20 ஆண்டுகளாக மனநலப் பாதிப்பால் குடும்பத்தை விட்டுப்... மேலும் பார்க்க

காவல்துறை என்ற மனித மிருகங்கள்: திமுக எம்எல்ஏ கடும் விமர்சனம்!

திருப்புவனம் இளைஞர் அஜித் குமார் காவலர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு திருச்சி கிழக்கு சட்டப்பேரவை உறுப்பினர் இருதயராஜ் கண்டனம் தெரிவித்துள்ளார்.சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் காவல்துறையால் ... மேலும் பார்க்க

போலீஸ் விசாரணையில் மரணம்: அஜித்குமார் குடும்பத்தாருக்கு முதல்வர் ஸ்டாலின் ஆறுதல்!

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே விசாரணைக்காக அழைத்துச் சென்ற இளைஞா் அஜித்குமார் போலீஸ் விசாரணையில் உயிரிழந்த சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாடு காவல் துறைக்கு பெரும் களங்கத்த... மேலும் பார்க்க