செய்திகள் :

`பெத்த குழந்தையே யாருன்னு தெரியல... எதிரிக்குக்கூட இது நடக்கக் கூடாது!' - கலங்கும் கரோலின் ஃபேமிலி

post image

சின்னத்திரையில் பரிச்சயமான முகம் கரோலின். விஜேவாக தனது பயணத்தை மீடியாவில் தொடங்கியவர் சின்னத்திரை நடிகையாக பல தொடர்களில் நடித்திருந்தார். கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான `ஜமீலா' தொடரில் தான் ஆறு மாத கர்ப்பமாக இருக்கும் போதே நடித்திருந்தார். அதன் பிறகு அவரை தொலைக்காட்சி தொடர்களில் பார்க்க முடியவில்லை.

சரி குழந்தைப்பேறு விடுப்பில் இருப்பார் எனத் தான் அவரது மீடியா நண்பர்கள் உட்பட பலரும் நினைத்திருந்தார்கள். ஆனால், ஒரு சம்பவம் அவரது வாழ்க்கையையே புரட்டிப் போட்டிருக்கிறது. திடீரென ஏற்பட்ட வலிப்பு நோயினால் அவரது வாழ்க்கையில் ஆறு வருடங்களை இழந்திருக்கிறார். அவரையும் அவரது கணவர் கார்த்திக்கையும், தாய் சில்வியாவையும் சந்தித்துப் பேசினோம்.

கரோலின்

என்ன நடந்ததுன்னே எனக்குத் தெரியல!

" ரொம்ப ஹெல்தியா தான் இருந்தேன். பாப்பா வயித்துல இருக்கும் போதே நடிச்சிட்டிருந்தேன். நார்மல் டெலிவரியில் பாப்பா பொறந்தா. நாங்க எல்லாரும் ரொம்ப ஹாப்பியா இருந்தோம். இப்ப வரைக்குமே என்னோட ஹெல்த் ரிப்போர்ட் ரொம்ப நார்மலா இருக்கு. எல்லா டெஸ்ட்டும் எடுத்துட்டாங்க. எந்த டெஸ்ட் ரிப்போர்ட்லேயும் எந்தக் குறையும் இல்ல. அப்ப ஏன் எனக்கு திடீர்னு வலிப்பு வந்ததுன்னு டாக்டர்ஸ் உட்பட யாருக்குமே தெரியல. நான் ஹாஸ்பிடல் போனதுல இருந்து எனக்கு என்ன நடந்ததுன்னே எனக்குத் தெரியல. அதெல்லாத்தையும் நீங்க என் கணவர்கிட்டேயும் என் அம்மாகிட்டேயும் தான் கேட்கணும்! " என்றதும் கார்த்திக் பேசத் தொடங்கினார்.

`எங்களுக்கு எல்லாமே கரோலின் தான்’

" நானும் சினிமாத்துறை தான். மேக்கப் ஆர்ட்டிஸ்ட் ஆக ஒர்க் பண்ணிட்டிருக்கேன். ஒரு ஷூட்டுக்காக பாண்டிச்சேரி போயிட்டு திரும்பி வரும்போது தான் என் மச்சான் ஃபோன் பண்ணி திடீர்னு கரோலினுக்கு வலிப்பு வந்த விஷயத்தை சொன்னான். அவசர அவசரமா தூக்கிட்டு பக்கத்துல உள்ள ஹாஸ்பிடலுக்கு போனோம். அங்க ராமச்சந்திரா இல்லைன்னா மியாட்டுக்கு கூட்டிட்டுப் போக சொல்லிட்டாங்க. நாங்க ராமச்சந்திராக்கு வந்தோம். முதல் 24 மணி நேரம் கிரிட்டிக்கல்னு சொல்லிட்டாங்க. அவங்க முகத்தை எல்லாம் மூடி குப்புற படுக்க வச்சிருந்தாங்க. அவங்களுடைய இதயம் 25% தான் ஒர்க் ஆகுது... 60% மேல் வந்தா தான் ட்ரீட்மென்ட் கொடுக்க முடியும்னு சொல்லிட்டாங்க. அப்புறம் அது நார்மல் ஆச்சு.

அடுத்ததா மூணு நாள்ல அவங்க கோமாவுக்கு போயிட்டாங்கன்னு சொல்லிட்டாங்க. எனக்கு என்ன பண்றதுன்னே தெரியல. எங்களுக்கு எல்லாமே கரோலின் தான்! 5 மாசக் குழந்தையை என் மாமியார்கிட்ட பார்த்துக்க சொல்லி விட்டுட்டு நான் மட்டும் தான் ஐசியூ வாசலிலேயே இருந்தேன். ஐசியூ வாசல்ல நிற்கிறது மிகப்பெரிய கொடுமைங்க.. எதிரிக்குக் கூட அந்த நிலைமை வரக் கூடாது!

கரோலின்

கோமாவுக்கு போனவங்க 16 நாள் கழிச்சு தான் சுயநினைவுக்கு வந்தாங்க. எல்லாம் சரி ஆகிடுச்சுன்னு போய் பார்த்தப்ப, `நாம கல்யாணம் பண்ணிக்கலாமா?'னு கேட்டாங்க.  எங்க எல்லாருக்கும் ஷாக் ஆகிடுச்சு. அப்புறம் டாக்டர் வந்து செக் பண்ணிட்டு இவங்களுக்கு கடந்த ஆறு வருஷம் மறந்திடுச்சுங்கிறதை சொன்னாங்க. எங்களுக்கு கல்யாணம் ஆனது, குழந்தை பொறந்ததுலாம் மறந்துட்டாங்க. போட்டோ, வீடியோ காட்டி தான் அவங்களுக்கு எடுத்துச் சொன்னோம். இன்சூரன்ஸ் எவ்ளோ முக்கியங்கிறதை அந்த மருத்துவமனை நாட்கள் தான் எனக்கு கத்துக் கொடுத்துச்சு.

அவங்களுக்கு வென்டிலேட்டர் வச்சிருந்ததால அதுக்கும் சேர்த்து மருத்துவ செலவு ஒரு நாளைக்கே கிட்டத்தட்ட 80,000 ரூபாய் வரைக்கும் ஆச்சு. எங்களுக்கு நடிகர் ஜீவா ரவி சாரைத் தெரியும். அவர் சொல்லி மிலா ஆப் மூலமா உதவி கேட்டோம். தவிர நான் ஒர்க் பண்ணின பெரிய பெரிய ஆர்ட்டிஸ்ட்கிட்டலாம் சொன்னேன். சிலர் உதவினாங்க. சிலர் உதவுறதா சொல்லி கடைசி நேரத்தில் கைவிட்டாங்க.

யாரும் யாருக்கும் உதவணும்னு கட்டாயம் இல்ல. ஆனா, அந்த நேரத்தில் முழுசா ஒருத்தர் உதவி செய்வாங்கன்னு நம்பி இருக்கிறப்ப அந்த நம்பிக்கையை கெடுக்கிறது ரொம்ப கொடுமை. நடிகர், இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் சார் உதவி பண்ணினார். அதே மாதிரி இப்ப நான் `மெட்ராஸ்' கலையரசன் சார்கிட்ட ஒர்க் பண்றேன். அவரும் அவரால முடிஞ்ச உதவி செய்தார். 

எனக்கும் இப்படி இருக்கிற கரோவை பார்க்க முடியல..!

`திருமகள்' சீரியல் ஹீரோ சுரேந்தர் எங்களுக்கு ஃபேமிலி ஃப்ரெண்ட். அவன் ஷூட்டிங் முடிஞ்சதும் என் கூட மருத்துவமனையில் இருப்பான். அவனும் அவன் ஃப்ரெண்ட்ஸூம் சேர்ந்து பணம் கலெக்ட் பண்ணி கொடுத்தாங்க. அந்தப் பணம் ரொம்ப உதவியா இருந்துச்சு. கிட்டத்தட்ட 32 லட்சம் செலவாகிடுச்சு!" என்றதும் கரோலினின் தாய் ஷில்வியாவிடம் பேசினோம்.

கரோலின்

" கரோலின் தான் எங்க வீட்டுக்கு எல்லாமே! அவ தான் தம்பி, தங்கச்சியை பார்த்துக்கிட்டா. கல்யாணமே வேண்டாம்னு சொல்லிட்டு இருந்தா. அவ கஷ்டப்பட்டு தான் எங்க குடும்பத்தை முன்னுக்கு கொண்டு வந்தா. வாழ்க்கை ரொம்ப சந்தோஷமா போச்சு. அன்னைக்கு நைட் திடீர்னு அவளுக்கு வலிப்பு வரவும் என்ன பண்றதுன்னு தெரியாம தான் ஹாஸ்பிடலுக்குக் கூட்டிட்டுப் போனோம்.

கிட்டத்தட்ட 10,12 வருஷத்துக்கு முன்னாடியும் இவளுக்கு இந்த மாதிரி வந்திருக்கு. அப்ப ப்ரெயின் ஃபீவர்னு கண்டுபிடிச்சாங்க. அப்பவும் கோமாவுக்குப் போனா ஆனா ரெண்டே நாளில் குணமாகிட்டா. அதுமாதிரி தான் இருக்கும்னு தான் நினைச்சோம். அங்கப் போன பிறகுதான் அதுக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லைன்னு டாக்டர்ஸ் சொன்னாங்க. 5 மாசக் குழந்தையை கையில வச்சிக்கிட்டு நடு ரோட்டுல நின்னேன். மாட்டுப்பால் ரெடி பண்ணிக் கொடுத்தோம். அது குழந்தைக்கு சேரல. டாக்டர்கிட்ட கேட்டு அவங்க கொடுத்த பவுடர் பால் கொடுத்து தான் சமாளிச்சோம்.

குழந்தை பொறந்ததுல இருந்து என் கையிலேயே அவ கொடுக்க மாட்டா. அவளே தான் வச்சிருப்பா. அப்படி இருந்தவ குழந்தையை கிட்டவே சேர்க்கலைங்கிறது தான் ரொம்ப வேதனையா இருந்தது. இப்ப அவ குழந்தையோட விளையாடுறதைப் பார்க்கிறப்ப சந்தோஷமா இருக்கு. மறுபடி வேலைக்குப் போகணும்னு சொல்லிட்டிருக்கா. எனக்கும் இப்படி இருக்கிற கரோவை பார்க்க முடியல. அவ வேலைக்குப் போகட்டும்! வீட்டிலேயே இருக்க வேண்டாம்!" என கண்கலங்கவும் கரோலின் தொடர்ந்தார்.

" இப்பவும் நிறைய வாய்ப்புகள் வந்துட்டு தான் இருக்கு. கழுத்துல டியூப் போட்டதால ஏற்பட்ட இந்த தழும்பை மறைக்கணும்னு தான் வெயிட் பண்ணிட்டிருக்கேன். ஜூலையில் பிளாஸ்டிக் சர்ஜரி குறித்து முடிவெடுக்கலாம்னு டாக்டர் சொல்லியிருக்காங்க. அதுக்காக வெயிட் பண்றேன்!" எனப் புன்னகைத்தார் கரோலின்.

கரோலின்

இன்னும் பல விஷயங்கள் குறித்து விளக்கமாக கரோலினும் அவருடைய குடும்பத்தினரும் நம்மிடையே பகிர்ந்து கொண்டனர். அவற்றைக் காண லிங்கை கிளிக் செய்யவும்!

``நான் முதன்முதலா டூர் போனது 'கூமாப்பட்டி'க்குதான்; அங்க..!” - பிக்பாஸ் தினேஷ் சொல்லும் கதை

'ஊட்டி கொடைக்கானல் எதுக்குங்க, எங்க ஊரை வந்து பாருங்க, திரும்பிப் போக உங்களூக்கு மனசே வராது' என உள்ளூர்க்கார யூ டியூபர் ஒருவர் வீடியோ வெளியிட, ஓவர் நைட்டில் கூகுள் ஸ்தம்பிக்கும் அளவு ஃபேமஸாகி விட்டது ... மேலும் பார்க்க

`ஒரே பதவியை குறி வைக்கும் 2 திமுக நடிகர்கள்!' - பரபரக்கும் சின்னத்திரை நடிகர் சங்கத் தேர்தல்

ஆகஸ்ட் மாதம் நடக்கவிருக்கும் சின்னத்திரை நடிகர் சங்கத் தேர்தலில் செயலாளர் பதவிக்கு திமுகவைச் சேர்ந்த இருவர் மோதுவது பரபரப்பாகியுள்ளது.தமிழ்த் தொலைக்காட்சி சீரியல்களில் நடிக்கும் நடிகர் நடிகைகளுக்கான ச... மேலும் பார்க்க

`எங்க அண்ணனும் ராமரும் தான் ரோல் மாடல்’ - நூலகம் திறந்த‌தன் காரணம் பகிரும் மதுரை முத்து

மதுரை அருகேயுள்ள தனது சொந்த கிராமத்தில் இருந்த தங்களது பூர்வீக வீட்டின் ஒரு பகுதியை இலவச நூலகமாக்கி அதைப் பொதுமக்களின் பயன்பாட்டுக்குத் திறந்து வைத்துள்ளார் பிரபல ஸ்டான்ட் அப் காமெடியன் மதுரை முத்து.க... மேலும் பார்க்க