செய்திகள் :

பீகாரைச் சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்டவர்; 20 ஆண்டுகளுக்குப் பிறகு குடும்பத்தினருடன் சேர்ந்த கதை

post image

நெல்லை மாவட்டம், காந்திநகர் பகுதியில் ஆதரவற்ற நிலையில் மனநலம் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் புதிய வாழ்கை வாழ ”பேயன் ஆர் சோயா” அமைப்பு எட்டு இல்லங்களை நடத்தி வருகிறது.  இந்த ‘மீண்டும்” இல்லத்தில் வாழ்ந்து வந்த பயனாளர் பாலேஸ்வர்.  இவர் ’ஸ்கிசோப்ரினியா’  என்ற  நோயால் பாதிக்கப்பட்ட நிலையில்,  சிவகங்கை குழுவினரால் கடந்த 18.06.2022 அன்று மீட்கப்பட்டார்.  சிகிச்சைக்கு பின் அவரது  குடும்பத்தை பற்றிய தகவல் அப்போது தெரியாததால் கடந்த  20.11.2023 அன்று திருநெல்வேலி ‘மீண்டும்” இல்லத்திற்கு மாற்றப்பட்டார்.  

நெல்லை ஆட்சியர் அலுவலகம்

இவர் மிக விரைவாகவே இங்கு குணமாகி பழைய ஞாபங்களை ஒருங்கிணைப்பாளர் திவ்யாவிடம் பகிர ஆரம்பிக்க ஒருங்கிணைப்பாளர் திவ்யா , பீகாரில் கயாவில் உள்ள காவல்துறையை நேரடியாகத் தொடர்பு கொண்டுள்ளார். கயா காவல்துறை மூலம் அவரது குடும்பத்தினரையும் வீட்டு முகவரியைத் தேட உதவி கோரினார்.  `பல முறை பல நாள் முயற்சி வெற்றி கிடைத்தது எங்கள் முயற்சிகள் வீண்போகாமல் அவரது மனைவி அலோபதி மற்றும் அவரது மகள் ரீட்டா ஆகியோர் கயா காவல் நிலையத்தில் வீடியோ அழைப்பு மூலம் அவருடன் பேச முடிந்தது.

அதன்பின் மகன் சனோஜ் குமார் மற்றும் உறவினர்கள் அணில், சஞ்சீவ் ஆகியோர் நெல்லையில் இருப்பதாகத் தகவல் அறிந்து பாலேஸ்வரைப் பார்ப்பதற்காக வந்திருந்தனர். அவர்களிடம் அவரைப் பற்றி விசாரித்ததில் அவருக்கு நான்கு குழந்தைகள் (3 ஆண் 1 பெண்) இருந்ததாகவும் சமீபத்தில் மூத்த மகன் சாலை விபத்து ஒன்றில் இறந்து விட்டதாகவும் கூறினார்கள். கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பாக மனநலம் பாதிக்கப்பட்டு சொந்த ஊரான பீகார் மாநிலம் கயா பகுதியை விட்டு வெளியேறியுள்ளார்.

நெல்லை ஆட்சியர் அலுவலகம்

தற்போது மகன் தனது தந்தையை உயிருடன் நேரில் பார்த்ததை நம்பமுடியாமல் கண்ணீர்விட்டார்.  பாலேஸ்வரர், அவர்களை பீகாரில் இருந்து வந்து அவரது மகன் மற்றும் உறவினர்களிடம் குடும்ப நிலை பற்றி கேட்டறிந்து, மருத்துவ ஆலோசனைகளையும் வழங்கி, மாவட்ட ஆட்சியர் சுகுமார் ஊருக்கு வழி அனுப்பி வைத்ததோடு, சோயா பொறுப்பாளர் சாராதாம்மாள், சோயா மாரிமுத்து மற்றும் சமூகப் பணியாளர் டேவிட் ஆசீர்  ஆகியோரையும் பாராட்டினார்.

`பெற்றோரை இழந்த பெண்' - கறி விருந்து, சீர்வரிசை என திருமணத்தை நெகிழ வைத்த பத்திரப்பதிவுத்துறை ஐ.ஜி

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியராக இருந்த தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தற்போது பத்திரப்பதிவுத்துறை தலைவராக இருக்கிறார். இவர் மாவட்ட ஆட்சியராக இருந்த போது பேராவூரணி அருகே உள்ள ரெட்டவயல் கிராமத்தைச் சேர்ந்த பாண்டிமீன... மேலும் பார்க்க

விகடன் செய்தி எதிரொலி: கோவை பாம்பு பிடி வீரர் சந்தோஷ் குடும்பத்துக்கு அரசு வீடு; உதவிய நல்லுள்ளங்கள்

கோவை வடவள்ளி பகுதியைச் சேர்ந்தவர் பாம்பு பிடி வீரர் சந்தோஷ்குமார். இவருக்கு திருமணமாகி 2 பெண் குழந்தைகள் உள்ளனர். கடந்த மார்ச் மாதம் சந்தோஷ் ஒரு வீட்டுக்குள் புகுந்த நாகப்பாம்பை பிடிக்கும்போது, எதிர்ப... மேலும் பார்க்க

'மாற்றத்திற்கான ஒரு விருந்து' - நலிவுற்றோருக்கான நாளந்தாவே ஃபவுண்டேஷனின் புதிய முன்னெடுப்பு

எழுத்தாளர், சமூக தொழில்முனைவோர் என்ற பன்முக ஆளுமையாக அறியப்படும் திரு. ஸ்ரீராம் V அவர்களால் நிறுவப்பட்டது நாளந்தாவே ஃபவுண்டேஷன். இது 20 ஆண்டுகால சேவை பாரம்பரியத்தை கொண்ட இலாபநோக்கற்ற ஒரு அமைப்பாகும். ... மேலும் பார்க்க

மழை வெள்ளம்.. மன வெள்ளம் | குறுங்கதை

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

G Madhavi Latha: மாதவி லதாவின் 17 ஆண்டுகால உழைப்பு; உலகின் உயரமான ரயில் பாலத்தின் வேர் - யார் இவர்?

ஜம்மு காஷ்மீரில் ஈபிள் டவர் உயரத்தை (330 மீட்டர்) விடவும் உயரமாக கட்டப்பட்ட ரயில் பாலமான செனாப் பாலத்தை (359 மீட்டர்) கடந்த வெள்ளிக்கிழமை (ஜூன் 6) பிரதமர் மோடி திறந்து வைத்தார். தற்போது உலகின் மிக உயர... மேலும் பார்க்க