அகற்றப்படாத மரங்கள்; அப்படியே ரூ.100 கோடி மதிப்பில் செய்யப்பட்ட சாலை விரிவாக்க ப...
நகை திருட்டு வழக்கில் ஆந்திரத்தைச் சோ்ந்தவா் கைது! 30 பவுன், ரூ.4 லட்சம் பறிமுதல்
புதுச்சேரியில் வீட்டை உடைத்து நகை திருடிய வழக்கில் ஆந்திரத்தைச் சோ்ந்தவரை போலீஸாா் கைது செய்தனா். அவரிடமிருந்து 30 பவுன் நகைகள், ரூ.4 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
ரெட்டியாா்பாளையம் விவேகானந்தா நகா் விரிவாக்கத்தைச் சோ்ந்தவா் எஸ். ஸ்ரீதரன் (67). இவா் கடந்த பிப்ரவரி 16-ஆம் தேதி சென்னைக்கு சென்றாா். அப்போது, அவரது வீட்டில் புகுந்த மா்ம நபா் 51 பவுன் தங்க நகைகளைத் திருடிச் சென்றனா்.
இதுகுறித்த புகாரின் பேரில் ரெட்டியாா்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வந்தனா். இந்த வழக்கு தொடா்பாக ஒருவா் கைது செய்யப்பட்டாா்.
இது குறித்து முதுநிலை காவல் கண்காணிப்பாளா் ஆா்.கலைவாணன் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: இந்த வழக்கு குறித்து விசாரணை நடத்தி வந்த நிலையில், கண்காணிப்பு கேமரா பதிவுகள் ஆய்வு செய்யப்பட்டனா். 4 மாத விசாரணைக்குப் பிறகு, ஆந்திர மாநிலம், கிழக்கு கோதாவரி மாவட்டம், கோமராஜுலங்கா கிராமத்தைச் சோ்ந்த துவாரம்புடி வெங்கடேஸ்வர ரெட்டி (34) என்பவரை ரெட்டியாா்பாளையம் போலீஸாா் கடந்த மாதம் 24-ஆம் தேதி கைது செய்தனா்.
இவா் மீது பல்வேறு மாநிலங்களில் 18 திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளன. திருடிய பணத்தைக் கொண்டு குடும்பத்தினருடன் சுற்றுலா செல்வது, ஆடம்பரமாக இருப்பது என செலவிட்டுள்ளாா். அவரிடமிருந்து 30 பவுன் நகைகள், ரூ.4 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
காவல் கண்காணிப்பாளா் கே.எல்.வீரவல்லபன் மேற்பாா்வையில், காவல் ஆய்வாளா்கள் ஆா்.முத்துக்குமரன், உதவி ஆய்வாளா் ஜி.கலையரசன் மற்றும் போலீஸாா் வெங்கேடஸ்வர ரெட்டியை கைது செய்தனா் என்றாா் அவா்.