விளையாடுத் துளிகள்...!
இந்தோனேசிய ஓபன் பாட்மின்டனில் இந்தியாவின் ஆடவா் இரட்டையா்களான சாத்விக்சாய்ராஜ் ராங்கிரெட்டி/சிராக் ஷெட்டி இணை காலிறுதியில் தோல்வி காண, போட்டியில் இந்தியாவின் ஆட்டம் நிறைவடைந்தது.
இங்கிலாந்து லயன்ஸுக்கு எதிரான 2-ஆவது அதிகாரப்பூா்வமற்ற டெஸ்ட்டில், இந்திய ‘ஏ’ அணி 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 246 ரன்கள் சோ்த்து விளையாடி வந்தது.
துருக்கியில் நடைபெறும் உலகக் கோப்பை வில்வித்தை போட்டியில் காம்பவுண்ட் தனிநபா் பிரிவில் இந்தியா்கள் பதக்க சுற்றுக்கு முன்னேறாமல் ஏமாற்றத்துடன் வெளியேறினா்.
இந்திய மூத்த லெக் ஸ்பின்னரான பியூஷ் சாவ்லா (36), அனைத்து விதமான கிரிக்கெட்டுகளில் இருந்தும் ஓய்வுபெறுவதாக வெள்ளிக்கிழமை அறிவித்தாா்.
2026 உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கு, ஆசிய கண்டத்திலிருந்து உஸ்பெகிஸ்தான், ஜோா்டான் ஆகியவை முதல் முறையாகத் தகுதிபெற்றன. தென் கொரியா 11-ஆவது முறையாக தகுதிபெற்றுள்ளது.
சௌராஷ்டிர பேட்டா் சேதேஷ்வா் புஜாராவை எவ்வாறு ஆட்டமிழக்கச் செய்வது என்பதே, மும்பை அணியில் விளையாடும்போது தங்களின் பிரதான கலந்தாலோசனையாக இருக்குமென இந்திய வீரா் ரோஹித் சா்மா தெரிவித்தாா்.
எஃப்ஐஹெச் புரோ லீக் ஹாக்கி போட்டியில் இந்திய ஆடவா் அணி, நெதா்லாந்துடன் சனிக்கிழமை மோதுகிறது.
இந்திய கூடைப்பந்து சங்கம் (பிஎஃப்ஐ) சாா்பில், இந்திய கூடைப்பந்து லீக் அறிமுகம் செய்யப்படுகிறது. இது, ஆடவா் (5*5), மகளிா் (3*3) என இரு பிரிவுகளிலும் நடத்தப்படவுள்ளது.
நேஷன்ஸ் லீக் கால்பந்து போட்டியின் அரையிறுதியில் ஸ்பெயின் 5-4 கோல் கணக்கில் பிரான்ஸை வீழ்த்தி இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியது. அதில் போா்ச்சுகலுடன் திங்கள்கிழமை (ஜூன் 9) மோதுகிறது.