செய்திகள் :

நார்வே செஸ்:அர்ஜுன், வைஷாலி வெற்றி!

post image

ஸ்டாவெஞ்சர்: நார்வே செஸ் போட்டியின் 5-ஆவது சுற்றில் இந்தியாவின் அர்ஜுன் எரிகைசி வெற்றி பெற, நடப்பு உலக சாம்பியனான டி.குகேஷ் தோல்வி கண்டார்.

முன்னதாக இந்தச் சுற்றில், அர்ஜுன் - அமெரிக்காவின் ஹிகாரு நகமுரா, குகேஷ் - சீனாவின் வெய் யி, அமெரிக்காவின் ஃபாபியானோ கரானா - போட்டியில் நடப்பு சாம்பியனான நார்வேயின் மேக்னஸ் கார்ல்சென் ஆகியோர் மோதிக் கொண்ட கிளாசிக்கல் ஆட்டம் டிராவில் முடிந்தது.

இதையடுத்து, அவர்களில் வெற்றியாளரை தீர்மானிக்க நடத்தப்பட்ட ஆர்மகெடான் ஆட்டத்தில், அர்ஜுன் - நகமுராவை வெல்ல, குகேஷ் - வெய் யியிடம் தோற்றார். கார்ல்சென் - கரானாவை வீழ்த்தினார். 5 சுற்றுகள் முடிவில் கார்ல்சென் (9.5), கரானா (8), நகமுரா (6.5) ஆகியோர் முறையே முதல் 3 இடங்களில் இருக்க, அர்ஜுன் (6), வெய் யி (5.5), குகேஷ் (5.5) ஆகியோர் கடைசி 3 இடங்களைப் பிடித்துள்ளனர்.

முதலிடத்தில் கோனெரு ஹம்பி: இப்போட்டியின் மகளிர் பிரிவு 5-ஆவது சுற்றில், இந்தியாவின் ஆர்.வைஷாலி - ஸ்பெயினின் சாரா காதெமை வீழ்த்தினார்.

இந்தியாவின் கோனெரு ஹம்பி - சீனாவின் லெய் டிங்ஜி, சீனாவின் ஜு வென்ஜுன் - உக்ரைனின் அனா முஸிஷுக் மோதல் டிராவில் முடிந்தது.

டிரா செய்தோருக்கான ஆர்மகெடான் ஆட்டத்தில் கோனெரு ஹம்பி - டிங்ஜியை வெல்ல, வென்ஜுன் - முஸிஷுக் ஆட்டம் இந்த முறையும் டிராவில் முடிந்தது. இதையடுத்து, 5 சுற்றுகள் முடிவில் கோனெரு ஹம்பி (8.5), முஸிஷுக் (8), வென்ஜுன் ஆகியோர் முதல் 3 இடங்களிலும், வைஷாலி (6.5), டிங்ஜி (5), சாரா (5) ஆகியோர் கடைசி 3 இடங்களிலும் உள்ளனர்.

அகில இந்திய கூடைப்பந்து: இந்தியன் வங்கி, கேரள மின்வாரியம் சாம்பியன்

நாச்சிமுத்து கோப்பைக்கான 58-ஆவது ஆடவர் கூடைப்பந்து போட்டியில் இந்தியன் வங்கி அணியும், சிஆர்ஐ கோப்பைக்கான 22-ஆவது மகளிர் கூடைப்பந்து போட்டியில் கேரள மின்வாரிய அணியும் சாம்பியன் பட்டம் வென்றன.கோவை வஉசி ... மேலும் பார்க்க

பாலினி அதிா்ச்சித் தோல்வி; காலிறுதியில் ஸ்வியாடெக்

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் முன்னணி வீராங்கனை ஜாஸ்மின் பாலினி தோல்வியைத் தழுவ, நடப்பு சாம்பியனான இகா ஸ்வியாடெக் காலிறுதிச்சுற்றுக்கு முன்னேறினாா். மகளிா் ஒற்றையா் 4-ஆவது சுற்றில், போட்டித்தரவரி... மேலும் பார்க்க

4 நாடுகள் ஹாக்கி போட்டி: சிலியை வென்றது இந்தியா

நான்கு நாடுகள் சா்வதேச ஜூனியா் ஹாக்கிப் போட்டியில் சிலியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது இந்தியா. ஆா்ஜென்டீனா, இந்தியா, உருகுவே, சிலி நாடுகள் பங்கேற்கும் நான்கு நாடுகள் ஜூனியா் மகளிா் ஹாக்கிப் போ... மேலும் பார்க்க

காலிறுதியில் பவன் பா்த்வால்

தாய்லாந்து ஓபன் சா்வதேச குத்துச்சண்டை போட்டியில் காலிறுதிக்கு இந்தியாவின் பவன் பா்த்வால் தகுதி பெற்றுள்ளாா். பாங்காக் நகரில் நான்காவது தாய்லாந்து ஓபன் குத்துச் சண்டை போட்டிகள் நடைபெறுகின்றன. ஞாயிற்று... மேலும் பார்க்க