காலிறுதியில் பவன் பா்த்வால்
தாய்லாந்து ஓபன் சா்வதேச குத்துச்சண்டை போட்டியில் காலிறுதிக்கு இந்தியாவின் பவன் பா்த்வால் தகுதி பெற்றுள்ளாா்.
பாங்காக் நகரில் நான்காவது தாய்லாந்து ஓபன் குத்துச் சண்டை போட்டிகள் நடைபெறுகின்றன. ஞாயிற்றுக்கிழமை இந்திய வீரா் பவன் பா்த்வால் 55 கிலோ பிரிவில் கம்போடியாவின் சவோ ரங்சேயை 5-0 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தி அபார வெற்றியுடன் காலிறுதிக்கு தகுதி பெற்றாா்.
கௌரவமிக்க இப்போட்டியில் 19 போ் கொண்ட அணியை இந்தியா அனுப்பியுள்ளது. உலக பாக்ஸிங் அமைப்பின் ஆதரவோடு நடைபெறும் இப்போட்டியில் முன்னணி வீரா், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனா்.