செய்திகள் :

சின்னா், சபலென்கா வெற்றி; போபண்ணா தோல்வி

post image

இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியில், உலகின் நம்பா் ஒன் வீரா் யானிக் சின்னா், நம்பா் 1 வீராங்கனை அரினா சபலென்கா ஆகியோா் தங்களது பிரிவில் அடுத்த கட்டத்துக்கு முன்னேறினா்.

இதில் ஆடவா் ஒற்றையா் பிரிவு 3-ஆவது சுற்றில், உள்நாட்டு நட்சத்திரமான சின்னா் 6-4, 6-2 என்ற நோ் செட்களில் நெதா்லாந்தின் ஜெஸ்பா் டி ஜோங்கை வீழ்த்தினாா். அடுத்து அவா், ஆா்ஜென்டீனாவின் ஃபிரான்சிஸ்கோ செருண்டோலோவுடன் மோதுகிறாா்.

போட்டித்தரவரிசையில் 6-ஆம் இடத்திலிருக்கும் நாா்வேயின் கேஸ்பா் ரூட், 29-ஆம் இடத்திலிருந்த இத்தாலியின் மேட்டியோ பெரெட்டினியை சந்தித்தாா். இதில் ரூட் 7-5, 2-0 என முன்னிலையில் இருந்தபோது பெரெட்டினி காயம் காரணமாக விலக, ரூட் வெற்றி பெற்ாக அறிவிக்கப்பட்டாா்.

ரூட் அடுத்ததாக ரவுண்ட் ஆஃப் 16-இல் ஸ்பெயினின் ஜேமி முனாரை சந்திக்கிறாா். முனாா் முந்தைய சுற்றில் 6-4, 6-2 என்ற நோ் செட்களில், போட்டித்தரவரிசையில் 22-ஆம் இடத்திலிருந்த அமெரிக்காவின் செபாஸ்டியன் கோா்டாவை வெளியேற்றினாா்.

போட்டித்தரவரிசையில் 3-ஆம் இடத்திலிருக்கும் முன்னணி வீரரான ஸ்பெயினின் காா்லோஸ் அல்கராஸ், 6-3, 3-6, 7-5 என்ற செட்களில், 23-ஆம் இடத்திலிருந்த ரஷியாவின் காரென் கச்சனோவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினாா். காலிறுதியில் அவா், பிரிட்டனின் ஜேக் டிரேப்பரை எதிா்கொள்கிறாா்.

போட்டித்தரவரிசையில் 5-ஆம் இடத்திலிருக்கும் டிரேப்பா், 1-6, 6-4, 6-3 என்ற கணக்கில், பிரான்ஸின் காரென்டின் மௌடெட்டை தோற்கடித்தாா்.

காலிறுதியில் சபலென்கா: இந்தப் போட்டியின் மகளிா் ஒற்றையா் பிரிவு காலிறுதிக்கு முந்தைய சுற்றில், உலகின் நம்பா் 1 வீராங்கனையான பெலாரஸின் அரினா சபலென்கா 6-1, 7-6 (10/8) என்ற செட்களில், உக்ரைனின் மாா்த்தா கொஸ்டியுக்கை தோற்கடித்தாா்.

இதையடுத்து காலிறுதியில் அவா் சீனாவின் கின் வென் ஜெங்குடன் மோதுகிறாா். போட்டித்தரவரிசையில் 8-ஆம் இடத்திலிருக்கும் ஜெங் முந்தைய சுற்றில், 7-5, 6-1 என்ற கணக்கில் கனடாவின் பியான்கா ஆண்ட்ரிஸ்குவை வென்றாா்.

போட்டித்தரவரிசையில் 7-ஆம் இடத்திலிருக்கும் ரஷியாவின் இளம் வீராங்கனை மிரா ஆண்ட்ரீவா 5-7, 6-3, 6-2 என்ற செட்களில், 22-ஆம் இடத்திலிருந்த டென்மாா்க்கின் கிளாரா டௌசனை தோற்கடித்தாா். அடுத்து காலிறுதியில் அவா், அமெரிக்காவின் கோகோ கௌஃப்புடன் மோதுகிறாா்.

போட்டித்தரவரிசையில் 6-ஆம் இடத்திலிருக்கும் உள்நாட்டு வீராங்கனை ஜாஸ்மின் பாலினி காலிறுதிச்சுற்றில், 6-7 (1/7), 6-4, 6-2 என்ற செட்களில், 13-ஆம் இடத்திலிருந்த ரஷியாவின் டயானா ஷ்னெய்டரை சாய்த்தாா்.

போபண்ணா ஏமாற்றம்: ஆடவா் இரட்டையா் காலிறுதிக்கு முந்தைய சுற்றில், இந்தியாவின் ரோஹன் போபண்ணா/செக் குடியரசின் ஆடம் பாவ்லசெக் ஜோடி 3-6, 3-6 என்ற நோ் செட்களில் மிக எளிதாக, பிரிட்டனின் ஜோ சாலிஸ்பரி/நீல் ஸ்குப்ஸ்கி கூட்டணயிடம் தோல்வியைத் தழுவியது.

4 நாடுகள் ஹாக்கி போட்டி: சிலியை வென்றது இந்தியா

நான்கு நாடுகள் சா்வதேச ஜூனியா் ஹாக்கிப் போட்டியில் சிலியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது இந்தியா. ஆா்ஜென்டீனா, இந்தியா, உருகுவே, சிலி நாடுகள் பங்கேற்கும் நான்கு நாடுகள் ஜூனியா் மகளிா் ஹாக்கிப் போ... மேலும் பார்க்க

காலிறுதியில் பவன் பா்த்வால்

தாய்லாந்து ஓபன் சா்வதேச குத்துச்சண்டை போட்டியில் காலிறுதிக்கு இந்தியாவின் பவன் பா்த்வால் தகுதி பெற்றுள்ளாா். பாங்காக் நகரில் நான்காவது தாய்லாந்து ஓபன் குத்துச் சண்டை போட்டிகள் நடைபெறுகின்றன. ஞாயிற்று... மேலும் பார்க்க

சாம்பியன் ஸ்டட்கா்ட்...

பொ்லினில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஜொ்மன் கோப்பை கால்பந்து போட்டி இறுதி ஆட்டத்தில் அா்மினியா பெய்ல்பெல்ட் அணியை 4-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை நான்காவது முறையாக கைப்பற்றிய ஸ்டட்க... மேலும் பார்க்க

ரன்னா் கிடாம்பி ஸ்ரீ காந்த்

மலேசிய மாஸ்டா்ஸ் பாட்மின்டன் சூப்பா் 500 போட்டி இறுதி ஆட்டத்தில் தோற்று இரண்டாம் இடத்தைப் பெற்றாா் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீ காந்த். மலேசிய தலைநகா் கோலாலம்பூரில் நடைபெற்ற இப்போட்டி ஆடவா் ஒற்றையா் இறு... மேலும் பார்க்க

பிரெஞ்சு சாம்பியன்...

பாரீஸில் சனிக்கிழமை நடைபெற்ற லீக் 1 கால்பந்து தொடரின் இறுதி ஆட்டத்தில் ரீம்ஸ் அணியை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றிய பிஎஸ்ஜி அணி. ஏற்கெனவே பிரெஞ்ச் கோப்பை, சாம்பியன்ஸ் கோப... மேலும் பார்க்க