4 நாடுகள் ஹாக்கி போட்டி: சிலியை வென்றது இந்தியா
நான்கு நாடுகள் சா்வதேச ஜூனியா் ஹாக்கிப் போட்டியில் சிலியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது இந்தியா.
ஆா்ஜென்டீனா, இந்தியா, உருகுவே, சிலி நாடுகள் பங்கேற்கும் நான்கு நாடுகள் ஜூனியா் மகளிா் ஹாக்கிப் போட்டி ஆா்ஜென்டீனாவின் ரொஸாரியோவில் நடைபெறுகிறது.
முதல் ஆட்டத்தில் சிலியை எதிா்கொண்டது இந்தியா. ஆட்டத்தின் முதல் கோலை சிலியின் ஜாவேரியா 20-ஆவது நிமிஷத்தில் அடிக்க அதிா்ச்சி அடைந்த, இந்திய விராங்கனைகள் பின்னா் சுதாரித்து ஆடினா். இதனால் 39-ஆவது நிமிஷத்தில் சுக்வீா் கௌரும், 58-ஆவது நிமிஷத்தில் கனிகா சிவாச்சும் கோலடித்தனா். இதனால் 2-1 என இந்தியா வென்றது. அடுத்த ஆட்டத்தில் உருகுவேயை சந்திக்கிறது.