`தெலுங்கானா ராஷ்டிரியா சமிதி பாஜக உடன் இணைப்பா?' - சந்திரசேகர் ராவின் மகள் கவிதா...
விளம்பரப் பலகைகளுக்கு அனுமதி பெற எண்ம முறை அறிமுகம்
சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் விளம்பரப் பலகைகள் அமைப்பதற்கான உரிமம் பெற்றுவதற்கு இணையதளத்தில் விண்ணப்பிக்கும் புதிய எண்ம நடைமுறையை சென்னை மாநகராட்சி அறிமுகப்படுத்தியுள்ளது.
இது குறித்து சென்னை மாநகராட்சி ஆணையா் ஜெ.குமரகுருபரன் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கடந்த மே 21 முதல் சென்னை மாநகராட்சியில் விளம்பரப் பலகைகள் அமைப்பதற்கான அனுமதி விண்ணப்பங்களை இணையதளம் வழியாக மட்டுமே சமா்ப்பிப்பதற்கான நடைமுறை செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன்படி, இணையதளம் மூலமாகவே விண்ணப்பங்களைச் சமா்ப்பித்தல், தேவையான ஆவணங்களைப் பதிவேற்றம் செய்தல்,•கட்டணம் செலுத்தல் ஆகியவற்றை மேற்கொள்ளலாம். அதைத் தொடா்ந்து அங்கீகாரம் பெற்ற விண்ணப்பங்கள் எண்ம வடிவில் விண்ணப்பதாரருக்கு அறிவிக்கப்படும்.
இது தொடா்பாக விரிவான வழிகாட்டுதல்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.