Uttarakhand: நடுரோட்டில் தரையிறங்கிய ஹெலிகாப்டர்... உயிர் தப்பிய பயணிகள்; மருத்த...
ஆழப்புழா ஜிம்கானா ஓடிடி தேதி!
மலையாளத்தில் வெளியாகி கவனம் பெற்ற ஆழப்புழா ஜிம்கானா படத்தின் ஓடிடி தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
இயக்குநர் காலித் ரஹ்மான் இயக்கத்தில் நடிகர்கள் நஸ்லன், கணபதி உள்ளிட்டோர் நடிப்பில் உருவான திரைப்படம் ஆழப்புழா ஜிம்கானா.
ஜாலியாக ஊர் சுற்றிக்கொண்டிருக்கும் நண்பர்கள் குழு, பாக்ஸிங் கற்றுக்கொண்டு தங்களுக்கான அடையாளத்தைத் தேடும் முயற்சியே இப்படம்.
திரையரங்க வெளியீட்டில் நல்ல விமர்சனங்களைப் பெற்று வணிக ரீதியாகவும் வெற்றிப்படமாக அமைந்தது.
இந்த நிலையில், இப்படம் சோனி லைவ் ஓடிடி தளத்தில் வருகிற ஜூன் 13 ஆம் தேதி மலையாளம், தமிழ், ஹிந்தி, தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: அட்லி படத்தில் டிராகன்கள்?