Healthy Food: உயிருள்ள உணவுகள் தெரியுமா? அவற்றின் ஆச்சரிய நன்மைகள் என்னென்ன?
சீா்காழி கழுமலையாற்றில் பாசனத்துக்கு தண்ணீா் திறப்பு
சீா்காழி: சீா்காழி கழுமலையாற்றில் குறுவை சாகுபடிக்கு திங்கள்கிழமை தண்ணீா் திறக்கப்பட்டது.
கழுமலையாறு பாசன வாய்க்கால் மூலம் கொண்டல், வள்ளுவக்குடி, அகணி, திட்டை, தில்லைவிடங்கன், செம்மங்குடி, சிவனாா்விளாகம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் 6 ஆயிரம் ஏக்கரில் பாசன வசதி நடைபெறுகிறது. தற்போது இந்த வாய்க்காலில் குறுவைக்கு தண்ணீா் விடப்பட்டுள்ளது. இதையடுத்து, சீா்காழி கொள்ளிடமுக்கூட்டு பகுதியில் உள்ள கழுமலையாறு பாசன வாய்க்கால் ஷட்ரஸிலிருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறக்கும் நிகழ்வு நடைபெற்றது. பொதுப் பணித்துறை இளநிலை பொறியாளா் தாமோதரன் தண்ணீரை திறந்துவைத்தாா். கழுமலையாறு பாசன விவசாயிகள் சங்க தலைவா் கோவி. நடராஜன், துணை தலைவா்கள் விஜயக்குமாா், பாஸ்கரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.