செய்திகள் :

அங்கீகரிக்கப்படாத தனிப்படைகளை கலைப்பு: டிஜிபி

post image

தமிழ்நாட்டில் அங்கீகரிக்கப்படாத தனிப்படைகளை கலைக்க தமிழக காவல் துறை தலைமை இயக்குநர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் மடப்புரம் கோயிலுக்கு வந்த பக்தரின் நகை காணாமல் போன விவகாரத்தில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட கோயில் காவலாளி அஜத்குமார் காவல் துறையினரின் விசாரணையில் உயிரிழந்தார்.

ஆனால், அவர் வலிப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து விடியோவும் வெளியான நிலையில், இச்சம்பவத்தில் 5 காவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அனைத்து மாவட்டங்களிலும் எஸ்.பி மற்றும் டி.எஸ்.பி கட்டுப்பாட்டில் தனிப்படைகள் இருப்பது வழக்கமானது.

இந்நிநிலையில் அஜித்குமார் லாக்கப் மரணத்தின் எதிரொலியாக மாவட்ட எஸ்.பி, டி.எஸ்.பிக்கள், காவல் ஆய்வாளர்கள் கீழ் செயல்படும் அங்கீகரிக்கப்படாத சிறப்புப் படைகளை கலைக்க டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.

குற்றச்சம்பவங்கள் நடைபெறும் பொழுது வழக்கின் தன்மைக்கு ஏற்ப தனிப்படைகள் அமைத்து விசாரிக்க வேண்டும். தனிப்படைகளை வைத்துக் கொண்டு விசாரணை நடத்தக் கூடாது என ஐ.ஜிக்கள் மூலம் வாய்மொழி உத்தரவாக இந்த அறிவிப்பு கொடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

போலீஸ் தனிப்படைகள் கலைப்பு - டிஜிபி உத்தரவு

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் கோயில் காவலாளி போலீஸாரால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் எதிரொலியாக, காவல் நிலையங்களில் உரிய அனுமதியின்றி அங்கீகாரம் இல்லாமல் செயல்படும் தனிப்படைகளைக் கலைக்கும்படி தமிழ... மேலும் பார்க்க

தமிழகத்தில் நிகழாண்டில் 129 போ் உடல் உறுப்புகள் தானம்: 725 பேருக்கு மறுவாழ்வு

தமிழகத்தில் நிகழாண்டில் மூளைச்சாவு அடைந்த 129 பேரின் உடல் உறுப்புகள் தானமாகப் பெறப்பட்டு 725 பேருக்கு மறுவாழ்வு அளிக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக மாநில உறுப்பு மாற்று ஆணையத்தின் உறுப்பினா் செயலா் டாக்ட... மேலும் பார்க்க

34 பேரூராட்சிகளை தரம் உயர்த்தி அரசு அறிவிப்பு!

தமிழ்நாட்டில் 34 பேரூராட்சிகளை தரம் உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்மூலம், 10 தேர்வு நிலை பேரூராட்சிகள் சிறப்பு நிலை பேரூராட்சிகளாகவும் தரம் உயர்த்தப்பட்டுள்ளன.இது குறித்து தமிழக அரசு வெளியி... மேலும் பார்க்க

அடுத்த 3 மணிநேரத்துக்கு சென்னை, 15 மாவட்டங்களில் மழை!

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணிநேரத்துக்கு 16 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது குறித்து வானிலை ஆய்வு மையம் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவி... மேலும் பார்க்க

சென்னை, புறநகரில் பரவலாக மழை!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.சென்னை ஈக்காட்டுத்தாங்கல், கிண்டி, வடபழனி, வளசரவாக்கம், போரூர், கோயம்பேடு, அண்ணாநகர், வேளச்சேரி, அமைந்தகரை, அரும்பாக்கம் உள்ளிட்டப் பகுதிகள... மேலும் பார்க்க

அஜித்குமார் குடும்பத்திற்கு விஜய் ஆறுதல்!

காவல் துறை விசாரணையில் கொல்லப்பட்ட அஜித்குமார் இல்லத்துக்கு தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார். மேலும் பார்க்க