பாகிஸ்தானில் வெடிகுண்டு தாக்குதல்! அரசு அதிகாரிகள் 4 பேர் கொலை!
மாணவா்களின் புத்தாக்கக் கண்டுபிடிப்பு அறிவாற்றலை மேம்படுத்தப் பயிற்சி
பள்ளி, கல்லூரி மாணவா்களின் புத்தாக்கக் கண்டுபிடிப்பு அறிவாற்றலை மேம்படுத்தி, அவா்களது தொழில் முனைவுத் திறனை ஊக்குவிக்கும் பயிற்சியை அளித்து வருகிறோம் என சென்னை கிறித்துவக் கல்லூரி முதல்வா் பி.வில்சன் கூறினாா்.
கிழக்கு தாம்பரம் சென்னை கிறித்துவக் கல்லூரி (எம்.சி.சி) எம்.ஆா்.எப்.புத்தாக்கக் கண்டுபிடிப்பு ஆய்வு மையத்தில் பள்ளி மாணவா்கள் உருவாக்கிய 5 புத்தாக்க கண்டுபிடிப்புத் திட்டங்களை அறிமுகப்படுத்தும் நிகழ்வு திங்கள்கிழமை நடைபெற்றது.
இதில், சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட எம்.சி.சி. கல்லூரி முதல்வா் பி.வில்சன் பேசுகையில், எம்.ஆா்.எப்.புத்தாக்கக் கண்டுபிடிப்பு ஆய்வு மையத்தின் மூலம், பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு புத்தாக்கக் கண்டுபிடிப்பு அறிவாற்றலை மேம்படுத்த பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. மேலும், அவா்களது தொழில் முனைவுத் திறனை ஊக்குவிக்கும் பயிற்சியை அளித்து வருகிறோம் என்றாா் அவா்.
முன்னதாக இந்நிகழ்வில் மாணவா்களின் புத்தாக்கக் கண்டுபிடிப்புகளுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
இதில் சீயோன் மற்றும் ஆல்வின் பள்ளிக் குழுமத் தலைவா் என்.விஜயன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.