செய்திகள் :

Shubman Gill: "வரலாற்றில் எந்த இந்திய கேப்டனும் செய்யாத சாதனை" - இரட்டை சதமும், கில் சாதனைகளும்!

post image

சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்துக்கெதிராக (ஜுலை 2) இரண்டாவது டெஸ்டில் களமிறங்கியது.

முதல் போட்டியில் டாஸ் வென்று பவுலிங்கைத் தேர்வுசெய்தது போலவே, இந்த டெஸ்டிலும் பவுலிங்கை தேர்வு செய்தார் இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ்.

அதன்படி, பேட்டிங் இறங்கிய இந்திய அணி முதல் நாள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 310 ரன்கள் குவித்தது.

சுப்மன் கில்
சுப்மன் கில்

141 ரன்களுடன் நாட் அவுட் பேட்ஸ்மேனாக நின்றுகொண்டிருந்த கேப்டன், இன்று தொடங்கிய இரண்டாம் ஆட்டத்தில் சிறப்பாக ஆடி 311 பந்துகளில் டெஸ்ட் கரியரில் தனது முதலாவது இரட்டை சதத்தை அடித்தார்.

முச்சதம் அடிப்பார் என்று எதிர்பார்த்த வேளையில் 269 ரன்களில் அவுட்டானார்.

இருப்பினும் இந்த இரட்டை சதத்தின் மூலம் ஒரு வீரராகவும், கேப்டனாகவும் பல்வேறு சாதனைகளைப் படைத்திருக்கிறார் கில்.

இரட்டை சதத்தால் கில் படைத்திருக்கும் சாதனைகள்!

* இங்கிலாந்தில் இரட்டை சதமடித்த முதல் ஆசிய கேப்டன் என்ற சாதனையை கில் படைத்திருக்கிறார். இதற்கு முன் இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் தில்ஷன் அதிகபட்சமாக 193 ரன்கள் அடித்திருந்தார்.

சுப்மன் கில்
சுப்மன் கில்

* கடந்த இரண்டு தசாப்தங்களில் இங்கிலாந்தில் இரட்டை சதமடித்த ஒரே வீரர் கில். இதற்கு முன் கடைசியாக 2003-ல் தென்னாபிரிக்காவின் அப்போதைய கேப்டன் கிரீம் ஸ்மித் லார்ட்ஸ் மைதானத்தில் இரட்டைச் சதமடித்திருந்தார்.

* இங்கிலாந்தில் ஒரு போட்டியில் அதிக ரன்கள் அடித்த இந்திய வீரர் என்ற சுனில் கவாஸ்கரின் (1979-ல் 221 ரன்கள் அடித்திருந்தார்) 45 வருட சாதனையை கில் (269) முறியடித்திருக்கிறார்.

சுப்மன் கில்
சுப்மன் கில்

* கவாஸ்கர் (1979), டிராவிட் (2002) ஆகியோருக்குப் பிறகு இங்கிலாந்தில் இரட்டை சதமடித்த இந்திய வீரர் கில்.

* இந்திய கிரிக்கெட் வரலாற்றில் வெளிநாட்டில் இரட்டை சதமடித்த முதல் இளம் இந்திய கேப்டன் கில்.

* ஒட்டுமொத்தமாக டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிகபட்ச தனிநபர் ஸ்கோர் அடித்த இந்திய கேப்டன் கில் (269). இதற்குமுன் 254 ரன்களுடன் கோலி முதலிடத்தில் இருந்தார்.

* இங்கிலாந்து மண்ணில் இரட்டை சதமடித்த ஏழாவது வெளிநாட்டு வீரர் கில்.

திண்டுக்கல்: கிரிக்கெட் வீரர் அஸ்வின் வழிபட்ட முருகன் கோயில்!

திண்டுக்கல் மாவட்டம் இராமலிங்கம் பட்டியில் போகர் நகரில் உலகப் புகழ்பெற்ற பாதாள செம்பு முருகன் அமைந்துள்ளது. முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் மற்றும் TNPL திண்டுக்கல்... மேலும் பார்க்க

"அந்த வீரர் இரட்டை சதமடித்தபோதே என் கரியர் முடிந்துவிட்டது" - மனம் திறக்கும் ஷிகர் தவான்

இந்திய கிரிக்கெட் வரலாற்றில் சச்சின், சேவாக் ஓப்பனர்களுக்குப் பிறகு உருவான மிகச்சிறப்பான ஓப்பனர்கள் ரோஹித், தவான்.2013 சாம்பியன்ஸ் டிராபியில் கவனம் ஈர்த்த இந்த ஓப்பனிங் ஜோடி சுமார் ஏழெட்டு வருடம் இந்த... மேலும் பார்க்க

ENGvsIND: 'பும்ரா எங்க? சாய் சுதர்சன் எங்க?' - அணித்தேர்வை வெளுத்து வாங்கிய ரவி சாஸ்திரி

'பிளேயிங் லெவன் மாற்றஙகள்!'இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கிடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடந்து வருகிறது. இந்தப் போட்டிக்கான ப்ளேயிங் லெவனில் இந்திய அணி நிறைய மாற்றங்கள... மேலும் பார்க்க

`அசத்திய பவுலர்கள்' சேப்பாக் சூப்பர் கில்லீஸை சுருட்டிய இறுதிப் போட்டியில் திருப்பூர் தமிழன்ஸ் அணி

திண்டுக்கல் நத்தத்தில் டிஎன்பிஎல் குவாலிபையர் -1 ஆட்டம் நேற்று நடைபெற்றது. அட்டவணையில் முதல் இரண்டு இடத்தில் இருந்த அணிகளான சேப்பாக் சூப்பர் கில்லீசும், திருப்பூர் தமிழன்ஸ் அணியும் மோதிக் கொண்டன. டாஸ்... மேலும் பார்க்க

``முன்னாள் மனைவிக்கு மாதம் 4 லட்சம் ஜீவனாம்சம் கொடுக்க வேண்டும்'' - ஷமிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமி, தனது முன்னாள் மனைவிக்கு ஜீவனாம்சமாக ரூ.4 லட்சம் வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.முகமது ஷமிக்கும், ஹசின் ஜஹானுக்கும் கடந்த 2014-ம் ஆண்டு திருமணம... மேலும் பார்க்க

CSK : 'சென்னை அணியில் சஞ்சு சாம்சனா?' - ஐ.பி.எல் இன் டிரேட் விதிகள் சொல்வதென்ன?

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சனை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டிரேட் முறையில் தங்கள் அணிக்கு வாங்கவிருப்பதாக ஒரு தகவல் சமூக வலைதளங்களில் உலாவிக் கொண்டிருக்கிறது. சென்னை அணியால் சாம்சனை வாங... மேலும் பார்க்க