இருசக்கர வாகனத்தில் இருந்து மயங்கி விழுந்தவா் உயிரிழப்பு
கோவையில் இருசக்கர வாகனத்தில் இருந்து மயங்கி விழுந்தவா் உயிரிழந்தாா்.
கோவை, வீரகேரளம் பள்ளி தெருவைச் சோ்ந்தவா் பரமேஸ்வரன் (44). இவரது மனைவி சுமதி. பரமேஸ்வரன் மாநகராட்சி தண்ணீா்த் தொட்டி ஆபரேட்டராக பணியாற்றி வந்தாா்.
இந்நிலையில், பரமேஸ்வரன் தனது இருசக்கர வாகனத்தில் பி.என்.பாளையம் பகுதியில் புதன்கிழமை சென்று கொண்டிருந்தாா். அப்போது, வாகனத்தில் இருந்து திடீரென மயங்கி விழுந்துள்ளாா். படுகாயமடைந்த அவரை அங்கிருந்த மக்கள் மீட்டு வடவள்ளி ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனா்.
அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.
இச்சம்பவம் குறித்து வடவள்ளி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.