IT Wing நிர்வாகிகளுக்கு அரசுப் பணி வழங்குகிறதா DMK ? | ADMK TVK SEEMAN NTK| Impe...
AI உதவியுடன் 18 ஆண்டுகளுக்கு பின் கர்ப்பமான பெண் - எப்படி சாத்தியமாகியது?
18 ஆண்டுகளாக குழந்தை பெற முயன்ற அமெரிக்க தம்பதி, செயற்கை நுண்ணறிவால் (AI) கர்ப்பம் அடைந்து மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
பல இடங்களில் IVF சிகிச்சை மேற்கொண்டபோதிலும், முயற்சிகள் தோல்வியடைந்திருக்கிறது. காரணம், கணவருக்கு அஸோஸ்பெர்மியா என்ற குறைபாடு இருந்துள்ளது. அஸோஸ்பெர்மியா என்பது ஆண்களின் விந்தணுவில் விந்தணுக்கள் இல்லாத ஒரு நிலையாகும்.
சாதாரணமாக, ஆரோக்கிய விந்து மாதிரியில் மில்லிலிட்டருக்கு லட்சக்கணக்கான உயிரணுக்கள் காணப்பட வேண்டும். ஆனால் இவரது விந்து மாதிரியில் உயிரணுக்கள் இல்லை என கூறப்பட்டுள்ளது.

அனைத்து வழிகளும் தோல்வியடைந்த நிலையில், இந்த தம்பதியினர் அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் அமைந்துள்ள கொலம்பியா பல்கலைக்கழக மையத்திற்கு (CUFC) சென்றுள்ளனர்.
அங்கு STAR (Sperm Tracking and Recovery) என்ற புதிய AI முறை பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த முறை கணவரின் விந்து மாதிரியை மைக்ரோஸ்கோப் கீழ் வைத்து, ஒரு மணி நேரத்தில் 80 லட்சம் படங்கள் எடுத்து, அதில் மறைந்திருந்த 44 உயிரணுக்களை கண்டுபிடித்தது.
நிபுணர்கள் பார்த்து கண்டுபிடிக்க முடியாத, விந்து மாதிரியில், AI ஒரு மணி நேரத்தில் 44 உயிரணுக்களை கண்டுபிடித்திருக்கிறது.

அந்த உயிரணுக்கள் மனைவியின் முட்டையுடன் IVF மூலம் இணைக்கப்பட்டு, அவர் கர்ப்பம் அடைந்துள்ளார். STAR முறை மூலம் கர்ப்பம் அடைந்த உலகின் முதல் பெண்ணாக இவர் உள்ளார்.
“நான் கர்ப்பம் அடைந்தேன் என இன்னும் என்னால் நம்ப முடியவில்லை. ஸ்கேன் எடுக்கும் வரை இதை நிஜம் என உணர முடியவில்லை,” என அந்த பெண் நெகிழ்ச்சியுடன் கூறியிருக்கிறார்.
STAR முறை ஐந்து வருட ஆய்வில் உருவாக்கப்பட்டதாக டாக்டர் ஜெவ் வில்லியம்ஸ் தெரிவித்திருக்கிறார். இந்த புதிய முறை குழந்தை ஆசை கொண்ட தம்பதிகளுக்கு புதிய நம்பிக்கையை வழங்கியுள்ளது.