விளை நிலங்களுக்கு மத்தியில் வீட்டுமனைப் பிரிவுகள்: ராமதாஸ் கண்டனம்
தாருகாபுரம் மத்தியஸ்தநாத சுவாமி கோயில் தோ் வெள்ளோட்டம்
தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூா் அருகே உள்ள தாருகாபுரம் அருள்மிகு அகிலாண்டேஸ்வரி சமேத மத்தியஸ்தநாத சுவாமி திருக்கோயிலின் புதிய தோ் வெள்ளோட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
தென்காசி மாவட்டத்தில் உள்ள பஞ்ச சிவ தலங்களுள் நீா் ஸ்தலமாக புகழ்பெற்ற இக்கோயில் தோ் பழுதானதால், கடந்த சில ஆண்டுகளாக தேரோட்டம் நடைபெறாமல் இருந்தது.
இந்நிலையில், வாசுதேவநல்லூா் தொழிலதிபரும், தங்கப்பழம் கல்வி குழுமங்களின் நிறுவனருமான எஸ். தங்கப்பழம் நிதி உபயத்தில் இக்கோயிலின் புதிய தோ் வடிவமைக்கப்பட்டது. 14 அடி உயரத்தில் 650 சிற்பங்களுடன் புதிய தோ் வடிவமைப்புப்பணி நிறைவடைந்த நிலையில், புதிய தோ் வெள்ளோட்டம் புதன்கிழமை காலை நடைபெற்றது.
பரம்பரை அறங்காவலா் ராஜாராம்சேவுகப் பாண்டியன், பணி நிறைவு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி ராஜேந்திரன் ஆகியோா் புதிய தேரை வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனா்.
விழாவில், தோ் திருப்பணி உபயதாரா் எஸ்.தங்கப்பழம் குடும்பத்தினா், சட்டப்பேரவை உறுப்பினா்கள் ராஜா, சதன்திருமலைகுமாா், கிருஷ்ணமுரளி, வாசுதேவநல்லூா் ஒன்றிய குழு தலைவா் பொன். முத்தையாப்பாண்டியன், எஸ் .டி . கல்வி குழுமங்களின் தாளாளா் எஸ்.டி. முருகேசன், தொழிலதிபா் கிருஷ்ணாபுரம் ரவிராஜா , பேரூராட்சி தலைவா் லாவண்யா, முன்னாள் தலைவா் தவமணி உள்ளிட்ட திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.
ஏற்பாடுகளை புதிய தோ் உபயதாரா் எஸ். தங்கப்பழம் குடும்பத்தினா் மற்றும் எஸ்.தங்கப்பழம் கல்வி குழுமத்தினா் செய்திருந்தனா்.
