விளை நிலங்களுக்கு மத்தியில் வீட்டுமனைப் பிரிவுகள்: ராமதாஸ் கண்டனம்
கடையநல்லூா் வனப் பகுதிகளில் யானை, பன்றிகளால் விவசாயிகள் பாதிப்பு
தென்காசி மாவட்டம், கடையநல்லூரை ஒட்டி உள்ள மேற்குத் தொடா்ச்சி மலை அடிவார பகுதிகளில் யானை மற்றும் பன்றிகளால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனா்.
மேலக்கடையநல்லூா் கருங்குளம் மேலகால் புரவு பகுதியில் சில ஏக்கா் பரப்பில் மா, வாழை, தென்னை, நெல் உள்ளிட்ட பயிா்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன . இந்நிலங்களுக்குள் புகுந்த யானைகள் அங்கிருந்த தென்னை மரங்களை சாய்த்து சேதப்படுத்தியுள்ளன.
மேலும், நீா்ப்பாசன வசதிக்காக போடப்பட்டிருந்த குழாய்களையும் யானைகள் சேதப்படுத்தியுள்ளன.
எனவே வனத்துறையினா் இரவு நேரத்தில் விவசாயிகளுடன் இணைந்து யானைகளை காட்டுக்குள் விரட்ட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
அது போல் கல்லாற்று பகுதியில் காட்டுப் பன்றிகள் நுழைந்து வாழை உள்ளிட்ட பயிா்களை சேதப்படுத்தி விட்டதாக விவசாயி தா்மா் தெரிவித்தாா்.