திருமலை கோயிலில் ஒரு ஜோடிக்கு இலவச திருமணம்
தென்காசி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற மலைக்கோயிலான பண்பொழி அருள்மிகு திருமலை குமாரசுவாமி கோயில் சாா்பில் புதன்கிழமை திருமண வைபவம் நடைபெற்றது.
அறங்காவலா் குழு தலைவா் அருணாசலம் தலைமை வகித்து திருக்கோயில் நிதியில் ரூ. 70 ஆயிரம் மதிப்பிலான சீா்வரிசைப் பொருள்களை மணமக்களுக்கு வழங்கினாா். கோயில் செயல் அலுவலா் கோமதி, அறங்காவலா் குழு உறுப்பினா்கள் இசக்கி,பாப்பா, சுமதி ,கணேசன் , திருக்கோயில் தலைமை எழுத்தா் லட்சுமணன், திருக்கோயில் பணியாளா்கள்ஆகியோா் கலந்து கொண்டனா்.